தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம்!


ஜோர்தானில் இலங்கை தமிழ் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டாரா?- பெற்றோர் சந்தேகம்
[ சனிக்கிழமை, 25 மே 2013, 11:31.57 AM GMT ]
ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.
அவரது தாயாரும் அந்நாட்டில் வேறொரு வீட்டில் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி நாடு திரும்பியிருந்தார்.
நாகேந்திரன் காந்திமதி ஜோர்தானில் தொடர்ந்தும் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்துள்ளார்.
'வீட்டு எஜமான் கொடுமை'
தனது மகளின் மரணம் தொடர்பாக ஜோர்தானிலுள்ள இலங்கை தூதுவராலயம் கடந்த 19-ம் திகதி அறிவித்திருந்த நிலையில், இன்று 25-ம் திகதி சடலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக அவரது தாயார் தமிழோசையிடம் கூறினார்.
தனது மகள் தன்னைத் தானே துப்பாக்கியால் சூட்டு தற்கொலை செய்வதற்கு காரணம் எதுவும் இருக்கவில்லை என்றும் அவருக்கு துப்பாக்கியை இயக்க தெரியாது என்றும் வீட்டுக்காரர்கள் மீதே சந்தேகம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டு எஜமானும் அவரது மகனும் தன்னைக் கொடுமைப்படுத்துவது பற்றி தனது மகள் ஏற்கனவே தன்னிடம் கூறியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தான் நாடு திரும்புவதற்கு முந்தைய நாள் வீட்டு எஜமானுடன் தன்னைச் சந்தித்த மகள், இந்த ஆண்டு ஜூலை மாதம் மூன்றாண்டு ஒப்பந்தம் முடிவடைகின்றபோது நாடு திரும்பவுள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாய் தெரிவித்தார்.
எஜமானும் அவரது மகனும் தன்னை கொடுமைப்படுத்துவது  இங்கு வந்த பின்னர்தான்; தெரிவித்திருந்தார். அங்கு நான் தங்கியிருந்த காலத்தில் கூறியிருந்தால் எனது வீட்டு எஜமான் உதவியுடன் மகளை மீட்டு நான் நாடு திரும்பும் போது அழைத்து வந்திருப்பேன்.
அவரது எஜமான் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். வீட்டில் நான்கு பேர் பெண்கள் எவரும் நிரந்தரமாக தங்குவதில்லை என்றும் இறந்தவரின் தாயார் மேலும் தெரிவித்தார்.
தனது மகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயான 45 வயதான நாகேந்திரன் மங்களேஸ்வரி மேலும் தெரிவித்தார்.

தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:13.44 AM GMT ]
இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக மீளவும் குணநாயகத்தை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது ரேனுகா செனவிரட்ன கடமையாற்றி வருகின்றார். இவரை ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராக நியமித்து அந்தப் பதவியை குணநாயகத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டை இலக்கு வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர ரீதியில் கூடுதலான அனுபவம் கொண்ட தமரா குணநாயகம், 2011ம் ஆண்டு ஜெனீவாவிற்கான வதிவிடப் பிரதிநிதி பதவியிலிந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், மீளவும் நியமிப்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten