இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தே பின்லேடன் இறந்தார்: மெய்காப்பாளர் தகவல் | |||
[ புதன்கிழமை, 29 மே 2013, 12:48.24 பி.ப GMT ] | |||
அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன.
இந்நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்து தான் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதையும் மறுத்துள்ள இவர், ஒசாமாவின் உடல் பாகத்தை தற்கொலைப்படை தாக்குதலில் சிதைக்கப்பட்டதைப் போல் துண்டு துண்டாக வெட்டி அமெரிக்க படையினர் அடையாளங்களை அழித்து மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
ஒசாமாவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்த போது நான் அந்த வீட்டில் இல்லை. எனினும், சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் மூலம் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றும் அவர் கூறுகிறார்.
அமெரிக்கர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 'பெல்ட்'டை எப்போதும் அணிந்திருந்தார் என்றும் நபீல் நயீம் அப்துல் பத்தா கூறினார்.
|
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
woensdag 29 mei 2013
சீனா கழிவறை குழாயில் கிடந்த குழந்தையின் தாயார் கண்டுபிடிப்பு: பரபரப்பு வாக்குமூலம்!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten