வன்னிப் படைத் தலைமையகத்துக்கு இந்திய இராணுவப் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் நாயகம் லெப்.ஜெனரல் ஆர்.என்.சிங் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று யாழ்.படைத் தலைமையகத்துக்குச் சென்று மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சுக்களை நடத்திய லெப். ஜெனரல் ஆர்.என்.சிங், இன்று வவுனியாவுக்கு சென்றுள்ளார்.
வவுனியா விமானப்படைத் தளத்தில் சிறப்பு விமானம் மூலம் வந்திறங்கிய லெப்.ஜெனரல் ஆர்.என்.சிங்கை வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மெஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வரவேற்றார்.
அதன் பின்னர், வன்னிப் படைகளின் தலைமையகத்தில் இந்திய இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கும், வன்னிப் படைத்தலைமையக உயரதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது வன்னியின் தற்போதைய நிலைமைகள், மீள்குடியமர்வு போன்ற விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிக்கான இந்தப் பயணத்தில் லெப்.ஜெனரல் ஆர்.கே.சிங்குடன், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு உயரதிகாரிகளும், இந்திய தூதரகப் பாதுகாப்பு ஆலோசகரும் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten