[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:11.01 AM GMT ]
இலங்கையைச் சேர்ந்த முக்கிய பிரபுக்களை கொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வைத்து இந்தக் கொலைகளை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளும் இலங்கையின் சிரேஸ்ட அரசியல்வாதிகளை கொலை செய்ய புலிகளின் ஹிட் ஸ்குவாட் பிரிவு திட்டமிட்டுள்ளதாக சுவிஸ் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாகவே சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு குண்டு துளைக்காத வாகனமும், ஆயுதப் பிரிவினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
நோர்வேயைச் சேர்ந்த புலி எதிர்ப்பு அமைப்பு ஒன்று இந்தத் தகவல்களை வழங்கியுள்ளது.
இலங்கையின் முக்கிய பிரபுக்கள் தொடர்பில் புலிகளின் உளவுப் பிரிவினர் வேவு பார்த்துள்ளதாக குறித்த சிங்களப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
த.தே.கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று அமைச்சர்கள் ஆதரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 01:51.10 AM GMT ]
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, மற்றும் டியு.குணசேகர ஆகியோரே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை இவர்கள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்றும் அதில் எந்தத் திருத்தமும் செய்யப்படாமலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மூன்று அமைச்சர்களும் கூறியதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படும் விவகாரம் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து காணி, காவல்துறை அதிகாரங்களை நீக்குவதற்கும் அமைச்சர்கள் மூவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரங்களை வடக்கு மற்றும் கிழக்கு கொடுக்க கூடாது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார். காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை இல்லாமல் வடக்கு மாகாண சபை அர்த்தமற்ற இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten