தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

அன்ரனோவ் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தடுப்பில் இருக்கும் புலிகள் இருவர் மீது வழக்கு!

விடுதலைப்புலிகள் சந்தேகநபர்கள் 10 பேர் இந்தியாவில் விடுதலை
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 12:05.38 AM GMT ]
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.
இந்த சந்தேகநபர்கள் 10 பேரும் 2002ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்டனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்ரனோவ் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தடுப்பில் இருக்கும் புலிகள் இருவர் மீது வழக்கு!
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 05:42.56 AM GMT ]
இலங்கை விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, இலங்கை விமானப்படையின் அன்ரனோவ் - 32 விமானத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 32 இலங்கை படையினர் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, இந்த விமாணம் தொழில்நுட்பக் கோளாறினால், வீழ்ந்து நொருங்கியதாக இலங்கை விமானப்படை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
எனினும், தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் இந்த விமானத்தை புலிகள் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தியதாக தெரியவந்தது.
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten