தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

இனவாதத்திற்கு அடிபணிந்ததில்லை!– ராஜித சேனாரட்ன


சக்தி வாய்ந்த இங்கிலாந்தின் தொழிலாளர் சங்கங்களோடு தமிழ் அமைப்புக்களின் தோழமை தினம் நிகழ்வு!
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 09:28.36 PM GMT ]
பிரித்தானியத் தமிழர் பேரவையும் தமிழ் தோழமை இயக்கமும் இணைந்து பிரித்தானியாவைச் சேர்ந்த UNISON போன்ற பல்வேறு தொழில் சங்கங்களோடு தோழமை தினம் ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர் வரும் ஜூன் மாதம் 8ம் திகதி, பி ப 4 மணி தொடக்கம் இரவு 8 மணி SOAS (School of Oriental and African Studies, University of London), Vernon Square Campus, Vernon Square, Penton Rise, WC1X 9EW  நிலக் கீழ் புகையிரதம்: Kings Cross/St Pancras (Lines: Victoria, Piccadilly, Northern, Metropolitan, Hammersmith and City, Circle and other national rail service  என்னும் இடத்தில் இவ் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஒடுக்கப்பட்டவர்களாக, பேச்சுரிமை உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இருப்பினும், புலம் பெயர்ந்து இங்கிலாந்து தேசத்தில் வாழும் தமிழ் மக்கள், அரசியல், சமூக தளங்களில் நாட்டமுள்ளவர்கள் என்பதையும், இந்த நாட்டின் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சிறப்புடன் பங்கேற்கக் கூடிய திறமை மிக்கவர்கள் என்பதையும் எடுத்துக் காட்ட இவ்வகையான கூட்டங்கள் உதவும்.
ஐக்கிய இராச்சியத்தில் அண்ணளவாக 300,000 தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கையை நிறுவனங்களோ அரசியல் கட்சியினரோ எளிதில் புறக்கணிக்க மாட்டார்கள். ஆகவே எமது இனத்திற்கு இடம் பெற்ற கொடூரங்களை பற்றியும், எம் தரப்பு நியாங்களை பற்றியும் இவ் அரசியல் கட்சிகள், சர்வதேச ஊடகங்கள், அரசின் உயர்நிலை அதிகாரிகள் உட்பட மேல்மட்டத்தில் சக்தி வய்ந்தவர்களைக் கையாளும் பிரித்தானியத் தமிழர் பேரவை பரந்துபட்ட பொதுமக்களின் அமைப்புகளுடனும் உறவுகளை ஏற்படுத்தி எம் விடுதலைப் போராட்ட அடிப்படைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றது.
அதன் மூலம் எமது காலத்தின் தேவைகளை தொழிழாளர் சங்கங்கள் போன்ற அமைப்புகளினுடைய கொள்கைகளுக்குள் இடம் பெற செய்வது, இதன் மூலம் பிரித்தானிய அரசிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் அடிமட்டத்திலிருந்து எமது கோரிக்கைகளுக்கான ஆதரவையும் அழுத்தத்தையும் ஏற்படுத்துவது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.
தென்னாபிரிக்க நிறவெறி அரசினை இங்குள்ள தொழில் சங்கங்கள் போன்றன இணைந்து நடத்திய போராட்டங்கள் பிரித்தானிய அரசிற்கு ஏற்படுத்திய அழுத்தங்கள் இன் நாட்டின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு காரணமான இனத்துவேசம் கொண்ட இன வெறி இலங்கை அரசை சர்வதேச சட்டத்தின் முன்னால் நிறுத்தி, அக்கொடிய அரசு 2009ம் ஆண்டின் முதல் 5 மாத காலப் பகுதிக்குள் 100,000 அப்பாவித் தமிழ் மக்களை திட்டமிட்டுக் கொன்றதற்கு நீதி கிடைப்பதற்கும் தொடரும் இன அழிப்பினை தடுத்து நிறுத்தி எம் மக்கலின் விடுதலையை வென்றெடுக்கும்வரை, தமிழ் மக்கள் எவருமே ஓய்வு கொள்ள முடியாது.
தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவில் இக் கூட்டத்தில் கலந்து கொள்வதால், நாம் ஒரு ஒன்றுபட்ட இனம் என்பதையும், நவம்பர் மாதம் இலங்கையில் நடை பெறவிருக்கும் பொதுநலவாய தலைவர்களின் கூட்டத் தொடருக்கான எங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்வதற்கும் 65 லட்சம் அங்கத்தவர்களைக் கொண்ட இன் நாட்டின் சக்தி வாய்ந்த பல தொழில் சங்கங்கலின் பிரதிநிதிகளுடன் உரையாடி உங்கள் கருத்துக்களை அவர்களுக்கு தோழமையுடன் தெரியப்படுத்தி எதிர்காலத்தில் அவர்களின் பூரண ஆதரவை நாம் வென்றெடுப்பதற்கும் இன் நிகழ்வு நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும்.
பிரித்தானிய தமிழர்களாகிய நாம், உரிமைகள் மறுக்கப்பட்டு பல தரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் தாயகத்தில் வாழுகின்ற எம் சகோதரர்கள் எதிர் கொள்ளும் அவலங்களை , ஜனநாயக ஆட்சி நடக்கும்பிரித்தானியாவின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்லல் அவசியம்.
 இன் நிகழ்வின் முக்கிய குறிக்கோள்களாக, தமிழ் சமூகத்திற்கும் தொழில் சங்கங்களுக்குமான அரசியல் சார்ந்த கலந்துரையாடல்கள் மூலம் அவர்களின் பங்களிப்புகளை பெற்றெடுத்தல், இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடருக்கான எதிர்ப்பு, இலங்கையில் தமிழருக்கெதிரான இடம் பெற்ற இன அழிப்பினை விசாரிக்க ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவுத் தளத்தை விரிவாக்கம் செய்தல், இலங்கைத தீவினில் பேச்சுரிமையும் பத்திரிகை சுதந்திரத்தையும் வலியுறுத்தல், தொழில் சங்கங்களுடன் தோழமையை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தல் என்பனவாகும்.
தமிழ் மக்களோடு தோளோடு தோள் கொடுக்க விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் தயவு செய்து இந்த "தோழமை" நாளில் கலந்து எம்மினத்திற்கும் விடுதலைக்கும் பலம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இனவாதத்திற்கு அடிபணிந்ததில்லை!– ராஜித சேனாரட்ன
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 02:38.25 AM GMT ]
எனது அரசியல் வாழ்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அந்த பல சேனா, இந்த பல சேனா என எந்த பலசேனா வந்தாலும் எம்மைப் போன்ற மனிதர்களை கீழே தள்ள முடியாது.
கௌதம புத்தரின் தத்துவங்களில் எந்த இடத்திலும் சிங்கள பௌத்தம் பற்றி வலியுறுத்தியதில்லை.
கௌதம புத்தர் ஜாதி என்பது எதுவென்பதனை தெளிவாக விளக்கியுள்ளார்.
உண்மையில் ஜாதி என்பது மனித ஜாதியையே குறிக்கும் என கௌதம புத்தர் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.
பௌத்த தர்மத்தில் எந்தவொரு இடத்திலும் பிக்குகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படவில்லை.
பொலிஸாருடன் அடித்துக் கொள்ளுமாறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
வீதிகளில் இறங்கி கொலை செய், கொடு, வெட்டுவேன் என கோசமிடுமாறு பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்படவில்லை.
உலகின் பல நாடுகளில் மதங்களுக்கு இடையில் வாதங்கள் நடைபெற்றன.
எனினும், அவை கை கால்களைப் பயன்படுத்தி நடத்தப்படவில்லை அவை, புத்தியூடாக நடத்தப்பட்டது என அமைச்சர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பேருவள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten