தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

கோத்தபாய ராஜபக்சவிற்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டும்!- பொதுபலசேனா கோரிக்கை


மத்திய மாகாண முதலமைச்சர் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! மீளப் பெற்றமைக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 01:48.19 AM GMT ]
மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கை மீளப்பெற்றமை தொடர்பில் இலங்கை லஞ்ச ஊழல் ஆணைக்குழு பகிரங்கமாக பதில் வழங்கவேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இது குறித்து கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கும் ஆணைக்குழுவினால் வழக்கும் தொடரப்பட்டிருந்தது.
எனினும் எவ்வித காரணங்களும் இன்றி, முதலமைச்சருக்கு எதிரான வழக்கை ஆணைக்குழு திரும்பப் பெற்றுக் கொண்டமை சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே லஞ்ச ஊழல் ஆணைக்குழு இது தொடர்பான விளக்கத்தை பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவிற்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டும்!- பொதுபலசேனா கோரிக்கை
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 01:41.44 AM GMT ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டுமேன பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பௌத்த சாசன அமைச்சு பௌத்த மக்களுக்கு உரிய முறையில் சேவையாற்றத் தவறியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சாசன அமைச்சைப் பாதுகாக்கும் பொறுப்பை பாதுகாப்புச் செயலாளரே சிறந்த முறையில் நிறைவேற்றுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசன அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten