[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:17.01 AM GMT ]
முறைப்பாட்டாளர் தரப்பிற்கு சார்பான வகையில் வழக்கினை விசாரிப்பதன் பொருட்டே அவரால் லஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் லக்ஷ்மி ஜயவர்தன தெரிவித்தார்.
இதன்படி, குறித்த 3 லட்சம் ரூபா நிதியை பெற்றுக் கொள்ளவதற்காக நேற்று மாலை ஹங்வெல்ல பகுதிக்கு சென்றிருந்த போது ஹோமாகம மாவட்ட நீதிபதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாவட்ட நீதிபதி இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக லஞ்ச மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாவட்ட நீதிபதி இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக லஞ்ச மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பு காரணமல்ல!- ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:56.53 AM GMT ]
இலங்கையில் தோன்றியிருக்கும் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பு பிரதான காரணம் அல்ல என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சில அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு தொடர்பில் மாறுபட்ட யோசனைகளை உள்ளடக்கிய நிலையில், சட்டமூலங்களை சமர்ப்பிப்பதனால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெலஉறுமய 13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தனியாள் உறுப்பினர் யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக அந்தகட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
13 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்து தீர்வுகளை முன்வைப்பதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்து செய்து அரச தலைவருக்கான 3 மாற்று முறைமைகளை அறிமுகப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசியலமைப்பு யோசனையொன்றை நேற்று முன்வைத்துள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு அன்றி, பொருளாதார முறைமையே மாறுபடவேண்டிய முக்கிய விடயம் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten