தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

யாழ்.குருநகரில் புத்தர் சிலை வைக்க எதிர்ப்பு! புத்தரை பாதுகாப்பாக கொண்டு சென்ற இராணுவம்!


யாழ்.தீவகத்தில் இனம் தெரியாத நபர்களினால் ஆட்டோக்களுக்கு ஆபத்து!- ஊர்காவற்துறை பொலிஸார்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 08:36.33 AM GMT ]
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் ஆட்டோவைத் தீ வைத்து கொழுத்தும் இனம் தெரியாத நபர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீவகத்தில் நேற்று மட்டும் 3 ஆட்டோக்கள் இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வேலணை வங்களாவடி முருகன் ஆலயத்தின் மேற்குப் பக்கத்தில் உள்ள கு.ஜெகதீஸ்வரன் என்பவரின் வீட்டில் நின்ற சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்டோ கடந்த 28 ஆம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வளவினது பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டிருந்த வேலியினைப் பிரித்துச் சென்ற இனந் தெரியாதவர்கள் தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் தீயில் எரிந்துகொண்டிருந்த ஆட்டோவினது பிளாஸ்ரிக் பொருட்கள் எரிந்து கொண்டிருந்த மணத்தை முகர்ந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக
கதவை திறந்து பார்த்த போது ஆட்டோ எரிவதை கண்டதையடுத்து அருகில் தொட்டியில் இருந்த தண்ணீரை அள்ளி ஊற்றி தீயினை அணைத்துக் கொண்டதாகவும் இதனால் தீ
பரவுவதை தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார்.
ஆட்டோ வண்டி சேவையில் ஈடுபட முடியாத அளவில் தீயில் எரிந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
யாழ்.குருநகரில் புத்தர் சிலை வைக்க எதிர்ப்பு! புத்தரை பாதுகாப்பாக கொண்டு சென்ற இராணுவம்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 08:33.11 AM GMT ]
யாழ்ப்பாணம் குருநகர் மடத்தடிப் பகுதியில் வெசாக் தினத்தில் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை குருநகர் கத்தோலிக்க சமூகத்தினரின் எதிர்பை அடுத்து இராணுவத்தினர் இந்த நடவடிக்கையைக் கைவிட்டுள்ளதாக தெரியவருகின்றது
யாழ். திருக்குடும்ப கன்னியர் மடத்திற்கு அண்மையில் உள்ள வெள்ளை அரச மரத்திற்கு கீழ் புத்தரை வைப்பதற்கு அத்திவாரங்கள் போடப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் சேர்ந்து எதிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அவ்விடத்திற்கு வந்த கத்தோலிக்க மதகுருமார் இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்பகுதி கத்தோலிக்க பாடசாலை ஒன்றிக்கு முன்னால் புத்தர் சிலையை வைப்பதை அனுமதிக்க முடியாது என அப்பகுதி மக்கள ஒருமித்த குரலில் தங்கள் மத உணர்வை வெளிப்படுத்தினர்.
இவர்களின் எதிர்பை அடுத்து புத்தரை பாதுகாப்பாக வெசாக் தினத்தில் கொண்டு சென்றனர் யாழ்.இராணுவத்தினர்.

Geen opmerkingen:

Een reactie posten