தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு பக்கச் சார்பாக நடந்து கொள்கிறதாம்! இலங்கை அரசு குற்றச்சாட்டு


இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்க கூடாது! மீறினால் தொழில் செய்ய தடை! காரை. நாகை பஞ்சாயத்து முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 07:04.17 AM GMT ]
இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடைவிதிப்பது என்று காரைக்கால்- நாகை மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார் வீரதாசன் கூறியதாவது:-
மீனவர்களின் ஒரே வாழ்வாதாரம் மீன்பிடி தொழில் மட்டுமே. மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேடி உயிரையும் பணயம் வைத்து காலம் காலமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சமீபகாலங்களாக காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட மீனவர்களும், தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதற்கு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையே தற்பொழுது சுமூகமான உறவுமுறை இல்லாததுதான் காரணம் என்று கூறப்படு கிறது. நாங்கள் வேண்டும் என்றே இலங்கை கடற்பகுதிக்குள் செல்வதில்லை.
இலங்கை கடற்பகுதியில் மீன்வளம் அதிகமாக காணப்படுவதால், இலங்கையை ஒட்டியுள்ள இந்திய கடற்பகுதிக்குள் தான் மீன்பிடிக்கிறோம். எதிர்பாராதவிதமாக அலைகளின் ஓட்டம், காற்றின் வேகம் காரணமாக அங்கு செல்ல நேரிடுகிறது.
எனவே இந்திய கடல் எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிப் பது என்றும், கண்டிப்பாக இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு இலங்கை கடற்பகுதிக்குள் சென்று யாராவது மீன்பிடித்து இலங்கை கடற்படையினரிடம் சிக்கினால், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை யாரும் எடுக்க மாட்டோம் என்றும், அவ்வாறு மீன்பிடிக்கும் மீனவர்களை 2 மாதம் மீன்பிடி தொழிலில் ஈடுபட தடை விதிப்பது என்றும், ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பது என்றும் காரைக்கால், நாகை மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் ஒன்று கூடி பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்த காரணத்தைக் கொண்டும் இரட்டை மடிவலை மற்றும் சங்கு வலைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், சின்னஞ்சிறிய மீன்குஞ்சுகளைக் கூட விட்டு வைக்காமல் அள்ளும் சுருக்குவலைகளை பயன்படுத்துவதால் மீன்வளம் குறையும் அல்லது அழியும் அபாயத்தை தடுக்க படிப்படியாக 3 ஆண்டுகளுக்குள் சுருக்குவலைகளை பயன்படுத்துவதை கண்டிப்பாக தடை செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு பக்கச் சார்பாக நடந்து கொள்கிறதாம்! இலங்கை அரசு குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 06:56.29 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித ஆணைக்குழு சில நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை, சில நாடுகளில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கண்டு கொள்வதில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் மனித உரிமை ஆணைக்குழு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு பக்கச்சார்பாகவோ அரசியல் உள்நோக்கங்களின் அடிப்படையிலோ இயங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் சுயாதீனத்தன்மையுடன் கூடியதாக அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நிதிச் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten