தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 10 வருட கடூழிய சிறை


வடக்கில் யுத்தத்திற்கு பின்னர் பாரியளவில் அபிவிருத்திப்பணிகள் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 08:37.46 PM GMT ]
யுத்தம் முடிவடைந்து குறுகிய காலத்திற்குள் வடக்கில் பாரியளவில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றுள்ளன தொடர்ந்தும் நடைப்பெற்று வருகின்றன என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 260 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இலங்கை நில அளவைத்திணைக்களத்தின் பிரதேச நில அளவை அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
அபிவிருத்தி எமது மக்களின் வாழ்வில் அவசியமான ஒன்று சிலர் குறிப்பிடுவது போன்று அபிவிருத்தியை புறக்கணிக்கும் மக்களாக நாம் இருந்து விடமுடியாது அப்படியிருந்திருந்தால் மீள்குடியேற்றத்தின் போது எல்லா செயற்பாடுகளும் பூச்சியத்திலிருந்து ஆரம்பித்த கிளிநொச்சி மாவட்டம் ஒரு குறுகிய காலத்திற்குள் பாரியளவில் அபிவிருத்தி கண்டிருக்காது
மேலும் விவசாய மாவட்டமான கிளிநொச்சிக்கு இன்னும் ஏராளமான அபிவிருத்திப்பணிகள் தேவையாக உள்ளது அபிவிருத்தியை நேசிக்கின்ற மக்களாக நாம் மாறுகின்ற போதே நாம் மேலும் முன்னோக்கிச் செல்லமுடியும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நல்ல சூழலை பாதுகாத்து எமது எதிர்கால சமூகத்திற்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்ட அவர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு அலுவலுகம் இன்று திறக்கப்பட்டுள்ளது இதன் மூலம் எமது மக்களின் தேதவைகள் மேலும் விரைவாக தீர்ப்பதற்கு வழிவகுப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
எழுச்சித்திட்டம் மற்றும் வடக்கின் துரித மீட்சித்திட்டம் ஆகியவற்றின் பிரதிதிட்டப்பணிப்பாளர் விஜகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட்பதியூதீன் காணி மற்றம் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத்வட மாகாண ஆளுநர் சந்திரசிறிபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டப்பணிப்பாளர் லியனகே நிலஅளவையாளர் நாயகம் மகேஸ் பெர்னாண்டோ கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன்மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 10 வருட கடூழிய சிறை
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 03:26.22 PM GMT ]
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர் 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்றம் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்டு, மேற்கண்டவாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு காலப்பகுதியில் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தினைச் சேர்ந்த 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கந்தசாமி பிரபாகரன் என்பவரை ஊர்காவற்துறை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு  ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டார்.
அவருக்கு எதிரான வழக்கு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால், யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் 2006ம் ஆண்டு  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கும் போது, தற்போது தனக்கு 16 வயது என்றும் தான் சாதாரண தரத்தில் கல்வி கற்று வருகின்றதாகவும் தெரிவித்தார்.
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தினைச் சேர்ந்த நான் 3ம் வட்டாரத்தில் உள்ள கந்தசாமி பிரபாகரனின் இரு பிள்ளைகளுடனும் விளையாடுவதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அப்போது, அவரின் மனைவி வீட்டில் இல்லை நான் அவரின் இரு பிள்ளைகளுடனும் விளையாடிக் கொண்டு வீட்டின் தூணை கட்டி பிடித்துக் கொண்டு நின்ற வேளை, சிவா என்று அழைக்கப்படும் கந்தசாமி பிரபாகரன், எனது வாயையும் மூக்கையும் இறுகி  அமர்த்திய படி வீட்டிற்குள இழுத்து சென்று என்னை துஷ்பிரயோகம் புரிந்தார்.
அவரது வீட்டிலிருந்து வந்த நான் நடந்தவைப் பற்றி எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அம்மா என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார் என்று சாட்சியமளித்தார்.
அத்துடன் சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மேற்படி வழக்கு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது சாட்சியங்களின் பிரகாரம் சந்தேகநபரான கந்தசாமி பிரபாகரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளன.
சந்தேகநபரான கந்தசாமி பிரபாகரனை நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டுள்ளதாக அறிவித்த ஆணையாளர், ஆட்கடத்தல் குற்றச்சாட்டிற்காக 7 வருட கடூழிய சிறைத்தண்டணையும், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் புரிந்த குற்றச்சாட்டிற்காக 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் அவருக்கு விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த இரு தண்டணைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும் அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 இலட்சம் ரூபா நட்ட பணம் கொடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
நட்ட ஈடு செலுத்த தவறின் மேலதிகமாக ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா குற்றப்பணமும் செலுத்த வேண்டுமென்றும், குற்றப்பணம் செலுத்த தவறின் 2 மாத கால சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten