[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 11:51.42 AM GMT ]
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
தமிழர்களாகிய நாம் இன்று எங்கள் இருப்பையே தக்க வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என விவேகானந்தநகர் மக்களுடனான சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.கி.சின்னராசா தெரிவித்தார்.
நேற்றிரவு கனரக வாகனங்களுடன் அந்தப் பகுதிக்கு வந்த 15 தொடக்கம் 20 பேர் கொண்ட குழுவினர் வாகனங்களை நிறுத்தி விட்டு முகவர் நிலையத்தை உடைத்து உள்ளே புகுந்து 98 லட்சம் ரூபா பணத்தினையும்,
ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தளபாடங்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தளபாடங்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த முகவர் நிலையம் ஜனாதிபதி மாளிகைக்கு 50 மீற்றர் தூரத்திலும், கோட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து 100 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
குறித்த சம்பவத்தை அப்பகுதியிலிருந்த சிலர் அவதானித்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.
இந்நிலையில் இன்று காலை குறித்த முகவர் நிலையத்தின் உரிமையாளர் நிலையத்தை திறந்த போதே உள்ளே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அறியப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பயண முகவர் நிலையத்தின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் மகேஷ்வரனின் மைத்துனர் எனவும், கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் மகேஸ்வரனின் மனைவியினால் ஏவப்பட்ட நபர்கள் குறித்த முகவர் நிலையத்தினை உடைத்து உரிமையாளரை தாக்கியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்திற்கும் விஜயகலா மகேஸ்வரனே காரணம் எனவும், அவரே அரச ஆதரவு அடியாட்களை ஏவி குறித்த கொள்ளைச் சம்பவத்தை நடத்தினார் எனவும் மேற்குறித்த நிலைய உரிமையாளர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
எங்கள் இருப்பை நாம் பாதுகாக்க வேண்டும்!– கிளி.மாவட்ட முன்னாள் கல்விப்பணிப்பாளர்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 11:27.05 AM GMT ]
அவர் தொடர்ந்து கருத்துரைக்கும் போது,
இன்று உலகிலுள்ள மனிதர்களுடைய மூளை செயற்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் ஒன்றும் அவற்றுக்குக் குறைந்தவர்களல்ல. இந்த நாட்டில் வரலாற்றுத் தொன்மை ரீதியான பிறப்பைக் கொண்ட நாங்கள் சுய உரிமையுடன் வாழும் தத்துவ உரித்தைக் கொண்டவர்கள் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.
1983 இல் பயங்கரமான இனக் கலவரம் இந்த நாட்டில் நடந்தது. மலையகத்திலிருந்தும் தென்பகுதியிலிருந்தும் எம்மைக் கலைத்தவர்கள் இன்று தாமே எமக்குப் பாதுகாப்பாளர்கள் என்கிறார்கள். இது ஒரு மிகவும் கேள்விக்குட்படும் விடயமாகும்.
நாங்கள் யார் என்பதை மறக்காத, சொந்தக் காலில் சுயமாக நிற்கும் வல்லமையினை நாம் வளர்க்க வேண்டும். உலகிலுள்ள செம்மொழிகளுள் தமிழும் ஒன்று. எங்கெளுக்கென்று பூர்வீகம் உண்டு. பரம்பரை வரலாற்று ரீதியான நிலம் உண்டு.
தனித்துவமான கலாச்சார, பண்பாட்டைக் கொண்டவர்கள் நாங்கள். இவ்வளவு சிறப்பினையும், உரித்தையும் கொண்ட நாங்கள் எங்கள் சுயத்தினை இழக்காது இருப்பைப் பேணி இனத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றார்.
விவேகானந்தநகர் பொதுநோக்கு மண்டபத்தில் கிராம முன்னேற்றச் சங்கச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், த.சேதுபதி, மா.சுகந்தன், விவேகானந்த நகர் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் கனகலிங்கம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் தி.சிவமாறன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தன் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் எல்லோரும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten