கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் வடமாகாண இலங்கை மின்சார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கிளிநொச்சிப் பிரதேசத்தில் போரில் இறந்த விடுதலைப்புலிப் போராளிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
தமீழீழ விடுதலைப் புலிகள் இயகத்தில் இருந்து இருபதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் போரிட்டு மாண்டனர். இவர்களுக்கான துயிலும் இல்லங்கள் வடக்கு கிழக்கு எங்கும் அமைக்கப்பட்டிருந்தன.
துயிலும் இல்லங்களை மிகவும் புனிதமான இடமாக பேணி வந்த புலிகள் ஆண்டு தோறும் மாவீரர் தினத்தில் அவ்விடத்தில் விசேசமாக தீபம் எற்றி வந்தனர்.
போரில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த இடம் பெரும் உணர்வுபூர்வமான இடமாக இருக்கின்றது.
இந்நிலையில் இவ்விடயங்களைக் கைபற்றிய இராணுவத்தினர் அவற்றை தரையோடு தரையாக அழித்துப்போட்டனர்.
கிளிநொச்சியைக் கைபற்றிய சில நாட்களிலேயே கிளிநொச்சி துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் தமது புல்டோசரால் அழித்தனர்.
அங்கு புதைகப்பட்டிருந்த இறந்த விடுதலைப் புலிகளின் பெற்றோர்களையும் உறவினர்களையும் இது கடுமையாகப் பாதித்தது.
துயிலும் இல்ல்ம் இருந்த காணிகளில் மக்கள் சென்று குடியேறலாம் என்று இராணுவத்தினர் அறிவித்த பொழுதும் அப்பகுதிகளில் யாரும் குடியேறவில்லை.
தொடர்ந்தும் மயான அமைதியுடன் எருக்கலைக் காடுகளாக அப்பகுதிகள் இருந்தன. இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடத்தில் இராணுவ முகாம் அமைத்து இருந்தனர்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை வடக்கு மாகாண சபையின் இலங்கை மின்சார சபைக்கு அரசாங்கம் ஒதுங்கியுள்ளது.
தமது பிள்ளைகளை புதைத்த இடத்தை கிண்டிக் கிளறிய பொழுதும் அது ஒரு மயானமாகக் கிடந்தது. அப்பகுதியை பார்த்து மக்கள் தமது பிள்ளைகளை நினைவுகூர்ந்தனர்.
இப்பொழுது அதற்கு மேல் மின்சாரசபை அலுவலகத்தை கட்டப் போகிறார்கள் என்ற செய்தி பெற்றோர்களை கடுமையாகத் தாக்கியுள்ளது.
இதைத் தடுத்து நிறுத்தி தமது பிள்ளைகள் புதைத்த இடத்தை அப்படியே விட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten