தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

தமக்கு இலங்கையில் பாதுகாப்பு இல்லை! பயங்கரவாதி எனக் கூறி அரசாங்கம் கைது செய்கின்றது!- அசாத் சாலி


டொமினிக் குடியரசில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் தகவல் வழங்கவில்லை!- அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 03:34.32 AM GMT ]
டொமினிக் குடியரசில் வைத்து அண்மையில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இன்னும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கனடாவை சேர்ந்த நல்லத்தம்பி கருணாநிதி என்பரின் தலைமையில் இயங்கிய ஆட்கடத்தல் குழு ஒன்றை கைது செய்ததாக, டொமினிக் குடியரசின் தேசிய புலனாய்வுத் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வழங்குமாறு டொமினிக் குடியரசில் உள்ள இலங்கையின் உயர்தானிகரத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவினர் சுமார் 60க்கும் மேற்பட்டவர்களை கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி

தமக்கு இலங்கையில் பாதுகாப்பு இல்லை! பயங்கரவாதி எனக் கூறி அரசாங்கம் கைது செய்கின்றது!- அசாத் சாலி
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 03:27.30 AM GMT ]
இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் வைத்து, அசாத் சாலி அவரை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மேலும் இரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2ம் இணைப்பு
சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் எம்மை பயங்கரவாதி எனக் கூறி அரசாங்கம் கைது செய்கின்றது: அசாத் சாலி
நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்க முயற்சி செய்யும் எங்களை பயங்கரவாதிகள் என்று கூறி அரசாங்கம் கைது செய்கின்றது. உண்மையில் அரசாங்கம் பயங்கரவாதிகளை நண்பராகவும் நண்பர்களை பயங்கவாதிகளாவும் கருதுகின்றது என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
அக்குறணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் தற்போது பத்து பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவனெல்ல பகுதியல் உள்ள பள்ளிவாசலை உடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை அநுராதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை எதிர்வரும் இரண்டாம் திகதிக்கு முன்னர் உடைக்காவிட்டால் அதனை தான் உடைக்கப் போவதாக அநுராதபுரம் மேயர் உத்தரவிட்டுள்ளார்.
இச்செயலுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்ல உள்ளோம்.
நாட்டுக்குள் பயங்கரவாதிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசின் ஆதரவுடன் போலியான முறையில் புனருத்தாபனம் செய்யப்பட்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் சார்பில் போட்டியிட உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் ஒரு சதித் திட்டமே இதுவாகும்.


Geen opmerkingen:

Een reactie posten