தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

தமிழர் பகுதிகளில் விகாரைகள்! ஆதாரத்துடன் நாடாளுமன்றில் நிரூபிக்கத் தயார்!- மாவை சேனாதிராஜா


அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவும் போது இலங்கைக்கே முதலிடம்! சீன - உலக சேவை மாநாட்டில் ஜனாதிபதி உரை!
[ புதன்கிழமை, 29 மே 2013, 06:39.42 PM GMT ]
சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹு ஹுவாய்பேங்க்கும் (Hu Huuabang) இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை "சைனா வேல்ட் ஹோட்டலில்" இடம்பெற்றது.
சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவிப்பு!
இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர் ,வெளிநாடுகளுக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்காக எமது வங்கி நிதி உதவி வழங்கும் போது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவும் போது இலங்கைக்கே முதலிடம் வழங்குவதாக உறுதியளித்தார்.
தமது வங்கியுடன் இலங்கை மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர், ,எதிர்காலத்திலும் இலங்கைக்கான இந்த உத்துழைப்பு மேலும் அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டார்.
நேற்று பீஜிங் நகரில் செய்துகொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களிலும் தமது வங்கியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக கொழும்பு - யாழ்ப்பாணம் அதிவேகப்பாதை அமைப்புக்கும் சீன அபிலிருத்தி வங்கி உதவியளிக்குமென தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது மேற்படிவங்கியின் பணிப்பாளர் நாயகம் சேன்ட் லின்வூ (Zhang Linwu) உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
உலக சேவை மாநாட்டில் ஜனாதிபதி உரை!
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பீஜிங் தேசிய மாநாட்டு மண்டபத்தில் இன்று (29) காலை ஆரம்பமான உலக சேவை மாநாட்டின் ஆரம்ப விழாவில் உரையாற்றினார்
ஆசிய நாடுகள் மத்தியில் பொருளாதார அபிவிருத்திக்கான கட்டமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றி தமது உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்

தமிழர் பகுதிகளில் விகாரைகள்! ஆதாரத்துடன் நாடாளுமன்றில் நிரூபிக்கத் தயார்!- மாவை சேனாதிராஜா
[ புதன்கிழமை, 29 மே 2013, 03:28.02 PM GMT ]
தமிழர் தாயகமான வடக்குக், கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னர் அரச தரப்பினால் அமைக்கப்பட்ட விகாரைகள் எத்தனை, என்பவற்றை அரசின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுக்குத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துக்காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது என்று மாவை. சேனாதிராஜா எம்.பி தெரிவித்தார்.
அத்துடன், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் எத்தனை? தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்களை எத்தனை? என்பவற்றையும் நிரூபிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பி எல்லாவல மேதானந்த தேரருடன் நாடாளுமன்றில் நேரடி விவாதத்தில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
கண்ணை மூடிப் பால் குடித்துக் கொண்டு இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதை எல்லாவல மேதானந்த தேரர் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten