தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

தஞ்சம் கோரியவா்களின் படகு விபத்து! இலங்கையா்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

ராஜபக்சாக்கள் தண்டனை பெறுவது எப்போது? - கி. வீரமணி முழக்கம்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 10:57.32 AM GMT ]
இனப்படுகொலைக்குக் காரணமான சர்வாதிகாரிகள் - கொடுங்கோலர்கள் - அவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் ஆனாலும், வரலாறு தண்டிக்காமல் விடுவதில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலை சாதாரணமானதா?  இந்தப் போர்க் குற்றவாளிகளான ராஜபக்சாக்களுக்கு தண்டனையே கிடையாதா? இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மிகுந்த வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். 
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இனப்படுகொலைக்குக் காரணமான சர்வாதிகாரிகள் - கொடுங்கோலர்கள் - அவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் ஆனாலும், வரலாறு தண்டிக்காமல் விடுவதில்லை.
நாஜிக்கள் என்ற ஹிட்லர், யூதர் இனத்தை அழித்ததற்கு உரிய தண்டனையை பல்வேறு வகைகளில் தீர்ப்புகளில் பெற்று, குற்றம் புரிந்த கொடுங்கோலன் என்று தீர்ப்பாகியது.
உகண்டா நாட்டு இடி அமீன்கள் இருந்த இடத்தை வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை!
இலங்கையில் ஈழத் தமிழர் எழுச்சியை அறவே அடக்கி விட்டோம்; அந்த இனத்தையே பூண்டற்றுப் போக அழித்தே தீருவேன் என்று சபதமேற்ற ராஜபக்ச குடும்பத்தினர், அந்தப் பணியில் பெரும் பகுதியை செய்து முடித்து வெற்றியை முத்தமிட்டு விட்டோம் என்று முழங்குகிறார்கள்!
முள்ளிவாய்க்கால் படுகொலை சாதாரணமானதா? விடுதலைப்புலிகளின் வேட்டை என்ற பெயரால் ஈழத்து எழுச்சிச் சின்னங்களான இளைஞர்களை அறவே அழித்திட பல வகை முறைகளைக் கையாண்டுள்ளன.
ஈழத்துத் தமிழச்சிகள் சுமார் 90 ஆயிரம் பேர் விதவைகள் என்ற கொடுமையைக் கண்டு வெற்றிப் புன்னகை புரிகின்றன - மனிதாபிமானமற்ற மரக்கட்டைகள்!
இந்தக் கொடுமையாளர்களுக்கு - போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனையே கிடையாதா என்று வேதனையோடும், வெந்த நெஞ்சின் புண்களோடும் கேள்வி கேட்கும் மனிதநேயர்களுக்கு ஓர் அருமையான வரலாற்று நிகழ்வு அண்மையில் நடந்துள்ளதைச் சுட்டிக் காட்ட விழைகிறோம்.
கவுதமாலாவைப் பாரீர்!
1982இல் மத்திய அமெரிக்கக் கண்டத்து நாடுகளில் ஒன்றான கவுதமாலா என்ற நாட்டின் இன்றைய நடப்பு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். கவுதமாலா நாடு, ஒரு சிறிய மத்திய அமெரிக்க நாடு. அங்குள்ள பூர்வீக குடியினர், மாயர்கள் என்பது வரலாற்றில் முக்கியமானது.
அந்த நாட்டில் 1982ல் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார் இராணுவத் தளபதி ஜெனரல் எப்ரெயின் ரியோல் மாண்ட் என்பவர். இந்தப் புரட்சி மூலம் மலைப் பகுதிகளில் இருந்த மண்ணின் மைந்தர்களான ‘இக்சில்மாயன்’ என்ற பூர்வீக இன மக்களைக் கொன்று குவித்தான். மொத்தமுள்ள ஜனத்தொகை ஆறரைக் கோடியில், 2 லட்சத்து 50 ஆயிரம் மாயர்கள் கொல்லப்பட்டனர்.
17 மாதங்கள் கொண்ட குறுகிய கால ஆட்சியில் ஈவிரக்கமற்ற முறையில் இந்த சர்வாதிகாரி இச்சில் மாயன் இன மக்களில் 5 விழுக்காடுகளுக்கு மேல் படுகொலை செய்தான். இந்த இனப்படுகொலைக்காக நீதி கேட்டு, கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமை இயக்கங்கள் போராடி வந்தன. அதில் நீதி கிடைக்காமல் தாமதிக்கப்பட்டே வந்தது! 30 ஆண்டுகளுக்குப்பின் நீதி கிடைத்துள்ளது இப்போது அவர் ஆட்சியை இழந்ததின் நல்ல விளைவு இது!
பல வகை சூழ்ச்சி, சாமர்த்தியங்களால் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விதவிலக்குப் பெற்று நியாயம் நீதியின் கரங்களிலிருந்து தப்பித்தே வந்தான். இரண்டாண்டுகளுக்கு முன் முதல் முறையாக அவன் தேர்தலில் தோல்வியுற்றான்.
அந்த மகிழ்ச்சியின் செய்தியை அறிந்த மனித உரிமை இயக்கங்களும், மற்ற உள்நாட்டு அமைப்புகளும் அவன்மீது வழக்குத் தொடுக்கக் கோரிக்கை வைத்தனர்.
கவுதமாலா நாட்டில் வாழ்ந்த மாயன் இனத்தவர்களைக் கொன்றொழிக்கும் கொடுமையை 500 ஆண்டுகளுக்குமுன் ஐரோப்பியர்கள் கால்வைத்த போதே தொடங்கி விட்டதாம்! இந்தக் கொடியவனைக் காப்பாற்றும் வகையில் அமெரிக்க ரொனால்ட் ரீகன் இவனைக் காப்பாற்றி விட்டார்! நடவடிக்கைகள் தொடரவில்லை!
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது நீதிபதி “கவுதமாலாவின் பெரும்பான்மையராக இருக்கும் 21 மாயன் இனக் குடிகளில், “இக்சில் மாயன்” இனத்தவர்களை, அடியோடு அழிக்கும் செயல் திட்டமிட்டே ரியா° மாண்டிற்கு நன்கு தெரிந்தே நடந்துள்ளது. அவர் நினைத்திருந்தால் இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்!’’ என்று கூறியுள்ளார்!
இந்தக் கயவனுக்கு 80 ஆண்டு சிறை வாசம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் முடிவை நீதிமன்றத்தில் நீதிபதி வாசித்தபோது, அங்கு பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கூடியிருந்தனர். அவர்களின் பெருத்த ஆரவாரம்; அது மட்டுமா?
மாயன் இனப் பெண்கள் கண்ணீர் பெருக்கினர்! ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு “நீதி நீதி” என்று பெரு முழக்கத்தை எழுப்பி தீர்ப்பை வரவேற்று மகிழ்ந்தனர்!
இந்த வழக்கு விசாரணையின்போது நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் தங்களது சாட்சியத்தைப் பதிவு செய்தனர்!
இக்சில் மாயன் இனப் பெண்களின், குழந்தைகள் வீசியெறிப்பட்ட, துப்பாக்கி முனைகளால் குத்திக் கொல்லப்பட்ட கோர நிகழ்வுகளையும் அந்தப் பெண்கள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்த போது தங்கள் கண்களில் வழிந்தோடிய இரத்தக் கண்ணீரை மறைக்க, முகங்களை மூடிக் கொண்டனர்!
இராணுவத்தால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றியும், தங்களது தாய், தந்தையர்கள், சகோதரர்களை குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து, வரிசையாக சுட்டு வீழ்த்தி, அந்தப் பிணங்களை அடுக்கிக் கூட்டுச் சமாதி கட்டிய செயல்கள் - எவ்வளவு பச்சாதாபமற்ற கோரத் தாண்டவம் ஆடின!
இதற்கிடையில் இது தாமதம் ஆகுமோ என்பதுபோன்ற தடைகளும்கூட வந்தன!
நாட்டின் உயர்நீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு ஆணையிட்டது.
காரணம் தற்போது நாட்டின் தலைவராக இருக்கும் பூட்டோபெரே° மோலினா என்பவர் 1980-களில் இக்சில் மாயன்கள் என்ற இனத்தவர் வாழ்ந்த பகுதியில் இராவணுத் தளபதியாக இருந்த போது அவர்களின் குடிசைகளை எரிப்பதற்கு ஆணையிட்டார் என்ற குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. இதனால் ரியா°மாண்ட் மீதான வழக்கு கால தாமதம் ஆனது.
ஆனால் இறுதி நீதி வென்று விட்டது!
இதற்குமுன் லத்தின் அமெரிக்க நாடுகளில், சில சர்வாதிகாரிகள் தண்டிக்கப்பட்டு சிறைக்குப் அனுப்பப்பட்டார்கள்.
தண்டிக்கப்பட்டவர்கள்
1) அர்ஜென்டினா - ஜோர்ஜ் விதேலா பல குற்றங்கள்.
2) சட்ட விரோதமாக சொத்து சேர்த்து மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் புரிந்த சிலி நாட்டின் அதிபர் பினோசெட் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு மரணமடைந்தார்.
3) ஆனால் இனப்படுகொலைக் குற்றத்திற்காக இந்த கவுதமாலாவின் இராணுவ சர்வாதிகாரிகளை பல லட்ச ‘இக்சல்மாயன்களை’க் கொன்றொழித்து 80 ஆண்டு தண்டனை பெற்றவர். இதுவே அந்தக் கண்டத்தில் முதல் முறை.
(இந்தத் தகவல்களை 15.5.2013 ‘இந்து நாளேட்டில் அமெரிக்காவில் உள்ள டென்வர் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு துணைத் தலைவர் ஆரோன் நெய்தர் என்பவர் எழுதியுள்ளார்)
கவுதமாலா நாட்டின் அதிபர் - கொடுங்கோலனுக்கு 80 ஆண்டுகள் தண்டனை - இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சாக்களும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இது வரலாறு கற்பித்த - கற்பிக்கப் போகும் பாடமாகும்.

தஞ்சம் கோரியவா்களின் படகு விபத்து! இலங்கையா்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 09:23.09 AM GMT ]
தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா பயணம் செய்த புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. படகு விபத்தில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கூட்டுப்படையினரால், கடலில் மிதந்த 8  உயிர் காக்கும் அங்கிகள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கொக்கோஸ் தீவுக்கு அருகில் இருந்து இந்த உயிர் காக்கும் அங்கிகள் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக ஏ எப் பி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
கொக்கோஸ் தீவுகள் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் தீவாகும்.
எவ்வாறாயினும் மீட்கப்பட்ட காக்கும் அங்கிகள் எந்த நாட்டிக்கு சொந்தமானது என்ற விடயத்தை தெரிவிக்க அவுஸ்திரேலிய உயரதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும், எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Geen opmerkingen:

Een reactie posten