தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

எம் இன விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் ஜனநாயக வழியில் முன்னெடுப்போம்!- மாவை சேனாதிராஜா!

நீதவானின் நடவடிக்கைகளினால் நீதிமன்றம் குறித்த நம்பிக்கையை இழக்கக் கூடாது: விஜயதாச ராஜாபக்ச
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 03:52.48 AM GMT ]
நீதவான் ஒருவர் அல்லது ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் நீதிமன்றம் குறித்த மக்கள் நம்பிக்கையை இழந்து விடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதவான் ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்பதே அதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. அண்மையில் ஹோமாகம நீதவான் மூன்று லட்ச ரூபா லஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவமானது உலக அரங்கில் இலங்கை நீதிமன்றின் நன்மதிப்பதிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
நீதிமன்றக் கட்டமைப்பு நேர்மையாக செயற்படுகின்றது என்பது மக்களுக்கு புலப்படக் கூடிய வகையில் இருக்க வேண்டுமென விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எம் இன விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் ஜனநாயக வழியில் முன்னெடுப்போம்!- மாவை சேனாதிராஜா
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 04:20.40 AM GMT ]
தமிழ் மக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் வட- கிழக்கை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் அனைத்துக் கட்சிகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இது தொடர்பில் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களாகிய நாம் எமது விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க நீண்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு தான் இருக்கின்றோம்.
தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்க்கின்ற வாழுகின்ற நிலங்களில் அதிகளவான இராணுவப் பிரசன்னங்கள் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
எங்களுடைய நிலங்களில் நாங்கள் வாழ முடியாமல் எங்களுடைய நிலங்களில் நாங்கள் விவசாயம் செய்ய முடியாமலும் எங்கள் கடலில் நாங்கள் தொழில் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு அகதிகளாக உள்ளோம்.
தமிழர்களின் பகுதிகளில் பௌத்த அமைப்புக்கள் படையெடுப்பு நடாத்துகின்றன. போர் வெற்றிச் சின்னங்கள் அமைக்கப்படுகின்றன.
இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட துயிலுமில்லங்கள் அடித்து இடிக்கப்படுகின்றன. அவ்விடத்தில் இராணுவ முகாம்கள் முளைக்கின்றன.
தமிழ் மக்கள் தமது உரிமைக்காக ஜனநாயக ரீதியான போராட்டங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளனர். எமது மக்களை ஒன்று திரட்டி எமது உரிமைக்காகவும் இறையாண்மைக்காகவும் இனவிடுதலை நோக்கி எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.
எமது விடுதலையை வென்றெடுக்க தொடர்ச்சியான போராட்டங்கள் வேண்டும் - மாவை எம்.பி
தமிழர்களாகிய நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க நீண்ட ஒரு விடுதலைப் போராட்டத்தினை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். இப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமாக காணப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பல நாடுகளுடைய விடுதலைப் போராட்டங்கள் பற்றி புத்தகங்களில் படித்து உள்ளேன். இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தினை  என்னால் நியாயப்படுத்திக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அப் போராட்டத்தின் மூலம் எமது தமிழ் இனம் விடுதலை பெறும் என்ற கருத்தும் என்னிடம் இருந்தது.
அப்போராட்டத்தில் நான் எவ்வளவு தூரம் ஈடுபாடு கொண்டிருந்தேன் என்று போசுவது தற்போது பொருத்தமற்றதாகத்தான் இருக்கும். ஆனால் அந்த விடுதலைப் போராட்டம் சர்வதேச அரசியல் இராஜந்திர அணுகுமறையில் போதியளவு அக்கறை காட்டமையே அதனுடைய முக்கிய குறைபாடாக இருக்க முடியும். அவ்வாறான ஒரு அனுகுமுறை இருந்திருந்தால் இந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றிபெற்றிருக்கும்.
ஜனநாயக ரீதியில் செயற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் வரலாற்றுத் தவறு ஒன்றினை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் புரிந்துணர்வு அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின்  போராட்டத்திற்கு அப்போது ஆதரவு வழங்கி இருந்தானர். இது மறுக்க முடியாத உண்மை.
2002, 2003 ஆம் ஆண்டுகளில் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் இருந்த போதும், போர் நிறுத்தம் மற்றும் வெளிநாடுகளில் நடபெற்ற பேச்சுவார்த்தைகளின் போதுகூட நாங்களும் மிக நெருக்கமாக இருந்திருக்கின்றோம்.
2002, 2004 ஆம் ஆண்டுத் தேர்தல் காலங்களிலும் கிளிநொச்சிக்கு சென்று அவர்களுடன் புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் எமக்குக் கிடைத்தது. ஆனால் நாங்கள் யாரும் எதிர்பாராத விதமாக தமிழீழ விடுதலைப் புலிகளி ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
மிக நீண்ட வரலாற்றினைக் கொண்ட இந்த நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் சரியான முறையில் மதிப்பீடு செய்திருந்தால் இவ்வாறான போராட்டங்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்த தமிழர்கள் தங்களுடைய தாயகப் பிரதேசத்தில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற தன்னாட்டி உரிமைக்காக பதில் போர் முடிவடைந்த பின்னாவது கிடைத்திருக்கும்.
ஆனால் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டு, இப்போராட்டங்கள் நடைபெறுவதற்குப் பின்னால் உள்ள காரணியான அரசியல் பிரச்சினை தீர்வைக் காணமல், அரசாங்கம் தொடர்ந்து தமிழ் மக்களுடைய குரல், ஜனநாயக குரல், தங்கள் பிரதேசத்தில் தங்களை தாங்களே ஆளுகின்ற தத்துவத்தைக் கொண்டிருக்கும் அந்தக் குரல்களை அடக்கி ஒடுக்கி இனிமேல் அந்த குரல்கள் எழக் கூடாது என்ற சிந்தனையும் சித்தாந்தமும் உள்ளவர்களாகவும், அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாகவும் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் எங்களுடைய தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்ற நிலங்களில் அளவுக்கு அதிமாக இராணுவத்தினுடைய பிரசன்னங்கள்ää சீனாவின் உதவியுடன் நிர்மானிக்கப்படும் இராணுவ முகாங்கள் மற்றும் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள் என்பன அபகரிக்கப்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல் அவர்கள் தொழில் செய்யும் கடற்பகுதிகளும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இராணுவத்திற்குப் பொறுப்பான அரசாங்கத்தின்
மீதே நாம் குற்றம் சுமத்துகின்றோம்.
இராணுவத்தின் இன்னடவடிக்கையால் எங்களுடைய நிலங்களில் நாங்கள் வாழ முடியாமல், எங்களுடைய விவசாய நிலங்களில் நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல், எங்களுடைய கடற்பரப்பில் நாங்கள் தொழில் செய்ய முடியாமல் அகதிகளாக வாழந்து வருகின்றோம்.
பௌத்த மதவாதிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் சைவர்,  இந்துக்களுக்கு இடையில் ஆயிரம் ஆண்டுகளாக போர் இடம்பெற்று உள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக தமிழர்களுடைய பகுதிகளில் பௌத்த அமைப்புக்களுடைய படையெடுப்புகள் நடைபெற்று வருகின்றது.
பௌத்தம் இல்லா இடங்களில் எல்லாம் விகாரைகள் கட்டுவதும், வேண்டுமென்றே தென்னிலங்கையில் இருந்து ஆட்களை வரவழைத்து வழிபாடு நடத்துவதும் தற்போது இங்கு நடைபெற்று வருகின்றது.
இதுமட்டுமல்லாமல் போர் வெற்றி நினைவு சின்னங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இதிலும் அநாகரிகமான செயல் என்னவென்றால் தமிமீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இறந்தவர்களுக்காக துயிலும் இல்லங்கள் கட்டப்பட்டிருந்தன. அவ்வாறு கட்டப்பட்ட துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.
இன்று அவ்வாறான இடங்கள் அழிக்கப்படுகின்றது. அழிக்கப்பட்ட இடங்கள் இராணுவத் தேவைக்காகவும், வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இச்செயற்பாடுகள் மூலம் இந்த அரசாங்கம் ஒரு அநாகரீகமான அரசாங்கம் என்பதை தெட்டத் தெளிவாக கட்டியுள்ளது.
இவ்வாறு நடந்து கொள்ளும் அரசாங்கத்தின் சிந்தனை என்னவென்னறால் தமிழ், முஸ்லீம் மகக்கள் தங்களுடைய நிலத்தில் செறிந்து வாழ்து தாங்கள் ஒரு தேசிய இனக் கூறு என்ற அடிப்படையில் சுயநிர்ணைய உரிமை தத்துவத்தைக் கொண்டவர்கள் என்பதை அடியோடு மாற்றி அமைப்பதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்ளையாக உள்ளது.
இந்த முயற்சிகளைப் பார்த்தால் தொடர்ச்சியா 60 ஆண்டுகளிலும் சரி இறுதிப் போர் முடிவடைந்ததும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இன அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு அப்பால் இராணுவும் மற்றும் பௌத்த இனவாதிகள் ஊடாக ஒரு இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதை நாங்கள் நிருபிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஐக்கியப் பட்ட இலங்கைக்ளுள் சுயநிர்ணைய உரிpமை அடிப்படையில் எங்கள் மண்ணில் நாங்கள் ஆளுவதற்கு ஜனநாயக ரீயிலில் போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள், உடன்பாடுகள் இடம்பெற்ற போதும் இவற்றை எல்லாம் மதிக்காமல், இப்படி ஒரு இனம் இல்லை என்றும் அல்லது அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு உரிமை தேவை என்பதை நிராகரிக்கின் ரீதியில் தான் இந்த அரசாங்கம் தனது செயப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதனை நாங்கள் சர்வதேசத்திற்கும் சொல்லியுள்ளோம். ஆனாலும் எங்களுடைய ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டது என்றாலும், ஜனநாயகப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது என்றாலும், இப் போராட்டங்களை நடத்தியதிற்கான அடிப்படை காரணத்தினை இல்லாமல் செய்ய இன அழிப்பினை மேற்கொள்ளும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்கள் முஸ்லீம்கள் தங்களுடைய நிலங்களில் தாங்களே ஆளுகின்ற சுயநிர்ணைய உரிமையை வென்றெடுக்க போராட வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் உள்ளோம்.
தங்களுடைய நாட்டிலேயே யாழ்பாணத்தினைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் மக்கள் இன்னம் முகாங்களிலும், தற்காலிக இடங்களிலும் தங்கியுள்ளனர்.
ஐ.நா வின் அறிக்கையின் படி தென்னிந்தியாவில் மட்டும் கடந்த 22 வருடங்களாக 80 ஆயிரம் மக்கள், இலங்கை அகதிகளாக உள்ளனர். இதனைவிட அவர்களுடைய இயற்கை பிறப்புவீதம் இன்னமும் அதிகமானவர்களை கொண்டுள்ளது.
இன்னமும் முழுமையாக மதிப்பீடுகள் வெளியிடப்பட்டவில்லை ஆயிலும் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இன்னம் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரவேண்டியவர்கள் உள்ளனர்.
இன்று கலைஞர் கருணாநிதி அவர்களும், அங்குள்ள கட்சிகளும் எங்களுடைய குடிப்பரம்பலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் அங்குள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறுவது, தற்கால சு10ழலை அவர்கள் உரிய முறையில் விளங்கிக் கொள்ளாமலேயே காரணம்.
இது எமக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. உள்நாட்டில் உள்ள அகதிகளும், வெளிநாட்டில் உள்ள அகதிகளும் தங்களுடை சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியாமல் இருப்பது அவர்களுடைய உறுதிக் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் தான். எனவே இராணுத்தினர் மக்களுடைய காணிகளை விட்டு வெளியேறி மீள்குடியேற்றத்திற்கு வழிவிட வேண்டும் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

Geen opmerkingen:

Een reactie posten