தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 28 இலங்கை அகதிகள் இன்று கொழும்பு வந்தனர்!


இந்திய பாஜக விசேட குழு இலங்கை வருகிறது! இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி ராஜ்யசபா உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூன் 4ம் திகதி இக்குழு இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் உயர் அதிகாரிகளை இக்குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.
மேலும், இலங்கையின் வடக்கே உள்ள தமிழர் பகுதிகளுக்குச் செல்லும் இக்குழுவினர், அங்கு இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளையும் பார்வையிடவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 28 இலங்கை அகதிகள் இன்று கொழும்பு வந்தனர்!
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 09:11.30 AM GMT ]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு முகங்கொடுக்கத் தவறிய 28 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட 28 இலங்கையர்களும் இன்று காலை கொழும்பை வந்தடைந்தனர்.

இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1206 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 994 பேர் சுயவிருப்பில் நாடு திரும்பியவர்கள் எனவும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten