தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

கணவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே நுளையும் புலனாய்வு !

சுவிஸ் நாட்டில் புலிகளின் படையணியா ? அதிர்சியில் அமைச்சர் !
29 May, 2013 by admin
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சுவிசில் நடைபெற்ற மாநாடு ஒன்றிற்கு இலங்கை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சென்றிருந்தார். அவருக்கு அங்கே குண்டு துளைக்காத காரும் ஆயுதம் தாங்கிய பொலிசாரையும் வழங்கியது சுவிஸ் அரசு. ஆனால் அதற்கு முன்னதாகவே அமைச்சருக்கு சுவிஸ் அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் என்ற செய்திகள் கசிந்தன. இம் மாநாட்டை ஒழுங்குசெய்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே, அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதனை காரணமாக வைத்து, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட புலிகளின் சிறப்பு பிரிவு ஒன்று சுவிஸ் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளது என சில தமிழ் இணையங்கள் புரளியைக் கிளப்பிவிட்டது. கோட்டபாய , சரத் பொன்சேகா , மகிந்தர் போன்ற போர் குற்றவாளிகள் சகல நாடுகளுக்கும் சென்றுவர, சுகாதார அமைச்சராக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவை புலிகள் ஏன் குறிவைக்கவேண்டும் ? அதுவும் சுவிசில் வைத்து ? 

லாஜிக்கே புரியலையே ? சர்வதேச ரீதியில் புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த ஒரு குழு நன்கு திட்டமிட்டுள்ளது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. மாநாடு ஏற்பாட்டாளர்களிடம் அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு சிலர் கோரிக்கையை விடுத்துவிட்டு அதே நேரம், புலிகள் சிறப்பு படையணி ஒன்று சுவிஸ் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளது என்று கட்டுக்கதைகளையும் அவிட்டு விட்டுள்ளார்கள். செய்திகள் கிடைக்காதா என்று தேடி அலையும் சில சில்லறை இணையங்கள் இதனைப் பெரிதுபடுத்தி வெளியிட, தற்போது அமைச்சரே குழப்பத்தில் உள்ளதாக தெரியவருகிறது. சுகாதார அமைச்சர் தற்போது சுவிஸ் அரசாங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக , அவர் அலுவலகம் ஊடகச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனைப் பார்ப்போமா ?

என்ன காரணத்திற்காக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தமக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கியது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பத் தீர்மானித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக, கடிதம் மூலம் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு அமைச்சர் இதனைத் தெரியப்படுத்த உள்ளார். அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சில மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சிறிசேன, அங்கு விஜயம் செய்திருந்தார். அதன் போது குண்டு துளைக்காத வாகனமும், ஆயுத படையினரின் பாதுகாப்பும் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விரும்புவதாக அமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். (இது தான் அந்த அறிக்கை)

அட புலிகளின் சிற்ப்பு படையணி சுவிசுக்குள் ஊடுருவியது என்று சில இணையங்கள் எழுத, இன்னும் ஒரு இணையம் வைச்சதே ஆப்பு ! தனது பங்கிற்கு அவ்விணையமானது சுவிஸ் நாட்டில் இலங்கை அமைச்சருக்கு கவசவாகன பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று எழுதியுள்ளது. அதாவது டாங்கிகள் பாதுகாப்புக்குச் சென்றது என்று. அட இவ்வளவு பாதுகாப்பு ஓபாமாவுக்கு கூட இருக்காதே !


கணவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே நுளையும் புலனாய்வு !
29 May, 2013 by admin
படைப் புலனாய்வுப் பிரிவினர் கணவர்களை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்க்கு வந்து பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள் என்று முன் நாள் பெண் போராளிகள் தெரிவித்துள்ளார்கள். 

திருகோணமலை மாவட்டத்தில் கணவர்களை விசாரணைக்க என அழைத்துச் சென்றுவிட்டு, தனிமையில் இருக்கும் பெண் போராளிகளிடம் விசாரணை எனத் தெரிவித்து படைப்புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் ரீதியிலான நடவடிக்கைக்கு முற்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டபறிச்சான் படை முகாமிலிருந்து படைப் புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்தி வந்தவர்கள், கடந்த 01.02.2013 சுதந்திர தினம் நடைபெறுவதற்கு முன்னர் இரு நாளைக்கு முன்னர் நான்கு போராளிகளின் வீட்டுக்கு சென்றவர்கள் தங்கள் கணவர்களை விசாரணை செய்தார்கள். பின்னர், சுதந்திர தினத்திற்கு அடுத்தநாள் வந்து 16 பேரை விசாரணை என்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இதுவரையில் எங்குள்ளார்கள் என்பது தெரியவரவில்லை என பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக திருமலையில் பொலிஸ், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐ.சி.ஆர்.சி ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரையில் எங்குள்ளார்கள் என்பது தெரியவரவில்லை. கணவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற பின்னரும், விசாரணை என்ற போர்வையில் புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீட்டுக்கு வருவதாகவும் இதனால் பெரும் அச்சத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களின், புண்ணியமூர்த்தி சுரேஸ் குமார் 29 அகவை தங்கநகர், சேனைஊரைச் சேர்ந்த நமசிவாயம் செந்தூரன் அகவை 28, நடராசா சண்முகலிங்கம் அகவை 35, பட்டித்திடலைச் சேர்ந்த கோணலிங்கம் சந்திரமோகன் அகவை 34, தர்மதாஸ் தவச்செல்வன் அகவை 36, தர்மலிங்கம் ஜெயக்காந்தன் அகவை 30, கணேசபுரத்தைச் சேர்ந்த யோகராசா உதயகுமார் அகவை 32 , வடிவேல் ராமு அகவை 34 கிளிவெட்டிமுகாம், இராசநாயகம், கணேஸ் ராமச்சந்திரன் அகவை 28 அம்மன்நகர், சுப்பிரமணியம் மகேந்திரன் அகவை 43 கிளிவெட்டி, வைரமுத்து வசந்தன் அகவை 34 ஆதியம்மன்கேணி, ஏனயை நான்கு பேரின் பெயர் விபரங்கள் தெரியவரவில்லை.

எனினும், மூன்று மாதங்களின பின்னர் இவர்கள் பூசா தடுப்பு முகாமில் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், பெரும்பாலானோருக்குத் தங்கள் கணவர்கள் எங்குள்ளார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் அனைவரும், ஒரு வருடம் தொடக்கம் மூன்று வருடங்கள் வரை புனர்வாழ்வுத் தடுப்பு முகாங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள். இதேவேளை, தங்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமூகத்துடன் இணைத்துள்ள போதிலும், விசாரணை என்ற போர்வையில் படைப் புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீடுகளுக்கு வருகை தந்து பாலியல் ரீதியான தொந்தரவுகளை செய்வதாக முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் ஒருவர், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் குமாரபுரத்தைச் சேர்ந்த கந்தபொடி, இவரின் மகள் 13 வயதில் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்து 2009 ஆம் ஆண்டில் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு வழங்கப்பட்டு கடந்த (2011) விடுதலையாகிய இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டுவரும் நிலையில் தற்போதும், விசாரணை என்ற போர்வையில் படைப் புலனாய்வுப் பிரிவினர்கள் வீட்டுக்கு வந்து சொந்தரவுகளை கொடுப்பதாக தெரிவிக்கின்றார்கள்.

இவரின் தாயார் கடந்த 1996 ஆண்டு படையினரால் வீட்டுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார், தந்தையையும் இழந்த அப்பெண் போராளி, விடுதலையாகிய பின்னர், ஊர்மக்களின் துணையுடன் ஒரு சிறிய கொட்டகையை அமைத்து தணிமையில் வாழ்ந்துவரும் இவரிடம் விசாரணை என்று கூறிக் கொண்டுவரும் படையின் புலனாய்வுப் பிரிவினர்கள் பாலியல் ரீதியான நடவடிக்கையில் ஈடுபட முற்படுவதாக தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten