தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம்


முக்கிய விடுதலைப் புலிக் கைதி, ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 01:53.54 AM GMT ]
முக்கிய தமிழீழ விடுதலைப் புலிக் கைதி ஒருவர் ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை வெசாக் வலயத்தில் பணியாற்றுவதற்காக நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த சிறைக் கைதிகளும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட முக்கிய தமிழீழ விடுதலைப் புலிக் கைதி ஒருவரும், ஏனைய நால்வரும் வெசாக் வலயத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வெசாக் வலயத்தில் கடயைமாற்றுவதற்காக 100 சிறைக் கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
ஜெகதீஸ்வரன் என்ற தமிழீழ விடுதலைப் புலி கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக அண்மையில் ஜெகதீஸ்வரன் என்ற கைதிக்கு ஐந்து ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் தண்டனைக் காலம் எஞ்சியிருக்கும் நிலையில் இவ்வாறு பொதுப் பணிகளில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்படுகிறது.
கைதிகளை கண்டு பிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 01:58.59 AM GMT ]
வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாணசபைத் தேர்தல்கள் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், தேர்தலை ஒக்ரோபர் மாதத்தில் நடாத்த தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணசபை சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்யயும், இடம்பெயர் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும் இந்தக் கால அவகாசம் பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது.
மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் அரசாங்கம் அவசர சட்டத் திருத்தங்களை செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten