தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

அதிரடி அறிவிப்பு: இலங்கைப் படைக்கு இனி தமிழகத்தில் பயிற்சி இல்லை !


தமிழ்ச்செல்வனின் மனைவி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்!
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 11:38.31 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவியும், மகளும் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி  மகாவித்தியாலயத்திற்கு சென்று தங்கள் பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டதாகவும், தலைவர் பிரபாகரனால் பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களை மாற்ற வேண்டியிருப்பதாக திருமதி தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் தாங்கள் நான்கு வருடங்களாக இருண்ட யுகத்திற்குள் இருப்பதாகவும், தனது பிள்ளைகள் நான்கு வருடங்களாகப் பாடசாலையைக் காணவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்ததாக சம்பவத்தினை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
இவருடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நால்வர் சேர்ந்து வந்ததாகவும் நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.

அதிரடி அறிவிப்பு: இலங்கைப் படைக்கு இனி தமிழகத்தில் பயிற்சி இல்லை !
27 May, 2013 by admin
இலங்கை இராணுவ சிப்பாய்களுக்கு மத்திய அரசு தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி சற்று முன்னர் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ சிப்பாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி உறுதியளித்திருப்பதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. தஞ்சையில் 150 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலைய ஓடுதளத்தை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி இன்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் சந்திப்பின் போதே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடல் கொள்ளைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் புதிய படைத்தளம் உதவி செய்யும் என்றார். ராணுவத்துறையில் தற்போது மிகவும் வலிமையான நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள 48 நாடுகள் நம்முடன் பேசி வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். அதில் இலங்கையும் ஒன்று என்பதனை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் வைத்துதான் பயிற்சி வழங்கமாட்டோம் என்று கூறியிருக்கிறாரே தவிர, இந்தியா என்று அவர் கூறவில்லையே.

எனவே அவர் கூற்றின்படி வேறு மாநிலங்களில் வைத்து இலங்கை அரச படைகளுக்கு தாராளமாக பயிற்ச்சி வழங்கப்படவிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

Geen opmerkingen:

Een reactie posten