போதாக்குறைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதனை ஏன் தலையில் தூக்கிவைத்து ஆடுகிறார்கள் ? புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களே 13 வது திருத்தச் சட்டத்தை அன்று நிராகரித்துவிட்டார்... ஆனால் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தூக்கிப் பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவரே நிராகரித்த இதனை நாம் ஏன் ஏற்க்கவேண்டும் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். 1987ம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒப்பந்தமே இந்த 13 வது திருத்தச்சட்டமாகும். வட கிழக்கு இணைக்கப்பட்டு, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு முதலமைச்சரை தேர்வுசெய்யவேண்டும் என்பது அதில் எழுதப்பட்டுள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டு மாநிலத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ள அதிகாரங்களைக் காட்டிலும் 60 சதவிகிதம் குறைந்த அதிகாரங்களே இந்த 13 வது திருத்தச்சட்டத்தில் உள்ளது. இதனை தமிழர்கள் ஏற்றுக்கொண்டால், சிங்களவர்களுக்கு தமிழர்கள் நிலந்தர அடிமையாகிவிடுவார்கள். அதனால் தான் புலிகளும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தோடு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படவேண்டும் என்று வேறு தற்போது சிங்களவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகள் தாம் முதலமைச்சர் ஆகும் நப்பாசையில் இதனை ஏற்பதாக கூறிவருவது பெரும் வேதனைக்குரிய விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten