தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

தமிழர் உரிமைகளை வென்றெடுக்க உயிருள்ளவரை நாம் உழைப்போம்: உப தவிசாளர் நகுலேஸ்வரன்


அமெரிக்க ஜனாதிபதியைவிட இலங்கை ஜனாதிபதிக்கு வசதிகள் அதிகம்: எதிர்க்கட்சித் தலைவர்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 10:06.13 AM GMT ]
இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பில் மக்கள் கருத்தறியவென இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளம் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,

´தாதுசேனன், மகாசேனன், பராக்கிரமபாகு ஆகியோர் இணைந்து கட்டிய குளங்களுக்கு அதிகமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன குளங்களை கட்டியுள்ளார். மகாவெலி போன்ற பாரிய திட்டங்களை செயற்படுத்த அன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பயன்படுத்தப்பட்டது.
1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஏற்படுத்தி அரசு பிரதானி, நிறைவேற்று பிரதானி, அரசாங்க பிரதானி போன்ற அதிகாரங்களை ஒன்றிணைத்தது அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையின் கீழாகும்.
அப்போது காலத்திற்கு ஏற்றவாறு செயற்பட்டோம். நாட்டுக்கு ஜனாதிபதி, பிரதமரை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் மக்கள் விருப்பத்திற்கு அமைய மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
அன்று ஜனாதிபதியும் நீதிமன்றமும் இணைந்து பாராளுமன்றை பலமிழக்கச் செய்துள்ளனர். இன்று ஜனாதிபதி பாராளுமன்றுடன் இணைந்து நீதிமன்றை பலமிழக்கச் செய்தார்.
அதன்படி இன்று பாராளுமன்றம், நீதிமன்றம், மனித உரிமை, வாக்குரிமை போன்ற அனைத்தும் பலமிழத்துள்ளன. பராக் ஒபாமாவைவிட அதிக வசதிகள் இன்றைய ஜனாதிபதிக்கு உள்ளது.
எனவே ஜனாதிபதி மாத்திரம் வெற்றியடைந்துள்ளார். நாட்டு மக்கள் தோல்வியடைந்துள்ளனர் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தமிழர் உரிமைகளை வென்றெடுக்க உயிருள்ளவரை நாம் உழைப்போம்: உப தவிசாளர் நகுலேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 10:42.59 AM GMT ]
எந்த இடர் வந்தாலும் யார் எம்மீது என்ன அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க நாம் உயிருள்ள வரை உழைப்போம் என கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி உதயநகர் மேற்கு மக்களுடனான சமகால அரசியல் நிலை தொடர்பான சந்திப்பிலேலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உதய நகர் மேற்கு சித்தி விநாயகர் ஆலய முன்றலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளரும் சந்தை வர்த்தகருமான தி.சிவமாறன் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய நகுலேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது,
“ இன்று ஈழத்தமிழர்கள் ஆயுத முனையின் விளிம்பில் வைத்து ஜனநாயகம் மறுக்கப்பட்ட சூழ் நிலையில் தங்கள் இனம் பற்றிப் பேச வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் வறுமை தாண்டவமாடுகிறது. தொழிலில்லைகல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்பதற்கான பொருளாதார வசதிகளில்லை.
கிளிநொச்சிப் பாடசாலைகளில் முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர்களில்லை. இந்த நிலையில் தான் எங்கள் இனத்தின் அடையாளத்தையும் ஆணிவேரையும் காப்பாற்ற வேண்டியவர்களாய் நாம் இருக்கின்றோம்.
எங்கள் நிலங்களைப் பறித்து மொழி கலாச்சாரத்தினைச் சிதைத்து எங்கள் வாழ்வியல் உரிமைகளைப் பறித்து ஏதுமற்றவர்களாகக், கேட்பதற்கு நாதியற்றவர்களாக உருவாக்க சிங்கள பௌத்த பேரினவாத அரசு முயன்று வருகின்றது. இந்த நிலையில் தான் எங்கள் மண்ணில் கௌரவமான வாழ்வியல் உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம்” என்றார்.
இக்கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா.வை குகராசா, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், மா.சுகந்தன் உதயநகர் மேற்கு பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten