தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

தீக்குளித்த பௌத்த பிக்குவின் இறுதிச்சடங்குகள் இன்று: வன்முறைகள் வெடிக்குமென அச்சம்!


நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய பிரதான கட்சிகள் இணங்காவிட்டால் பொது வேட்பாளரை நிறுத்த நேரிடும்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 02:08.12 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு பிரதான கட்சிகள் இணங்காவிட்டால் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க நேரிடும் என சாதாரண சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த பொதுவான வேட்பாளர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு மூன்று மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வார்.
நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்வம் காட்டவிட்டால், பொது வேட்பாளர் ஓருவரை நிறுத்த நேரிடும்.
பொதுவான வேட்பாளர் யார் என்பதனை இதுவரையில் தீர்மானிக்கவில்லை.
நீதியான சமூகமொன்றை எதிர்பார்க்கும் எவரும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட மாட்டார்கள் என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தீக்குளித்த பௌத்த பிக்குவின் இறுதிச்சடங்குகள் இன்று: வன்முறைகள் வெடிக்குமென அச்சம்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 04:10.53 AM GMT ]
கண்டி தலதா மாளிகை முன்பாக மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடைசெய்யக் கோரி, தீக்குளித்து இறந்த பௌத்த பிக்குவின் இறுதிச் சடங்கை இன்றே நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உயிரிழந்த பௌத்த பிக்குவான போவத்தை இந்திரரத்ன தேரரின் இறுதிச்சடங்கு நாளை இரத்தினபுரி கஹவத்தையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இதனைக் காரணமாக வைத்து கடும் போக்குவாத பௌத்த பிக்குகளும், பேரினவாதிகளும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடலாம் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு எழுந்துள்ளது.
இந்நிலையில், பௌத்த பிக்குவின் இறுதிச்சடங்கை அவசர அவசரமாக இன்றே நடத்துவதற்கு இரத்தினபுரி காவல்துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று பிற்பகல் 4 மணியளவில் பிக்குவின் இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது.இறுதிச்சடங்குகளின் போது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை தடுக்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten