தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

இந்திய அமைதி காக்கும் படையினருக்கு தரம் குறைந்த உணவுகளை விநியோகித்த அதிகாரிகளுக்கு தண்டனை!


தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்து
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:15.53 AM GMT ]
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நான்கு மிக முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்தாகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
த பெங்கொக் போஸ்ட் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தின் பிரதமர் யிங்லக் சின்வேட்ரா எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், இராஜதந்திரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளது கடவுச் சீட்டுகளை வைத்திருப்போருக்கு, இரண்டு நாடுகளுக்கும் வீசா தேவையில்லை என்ற உடன்படிக்கை மற்றும் இரண்டு நகர இணைப்பு ஆகிய நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகவுள்ளன.
இதன்படி, கண்டி நகரமும், தாய்லாந்தின் ஆயுத்தியா நகரமும் ஒன்றிணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளையும் அவர் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அமைதி காக்கும் படையினருக்கு தரம் குறைந்த உணவுகளை விநியோகித்த அதிகாரிகளுக்கு தண்டனை
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:09.07 AM GMT ]
இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினரர் தங்கி இருந்த போது, அவர்களுக்கு தரம் குறைந்த மற்றும் அனுமதி அற்ற உணவுகளை விநியோகித்த இரண்டு முன்னாள் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் குப்தா மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் கடியான் ஆகிய இருவருக்குமே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1987-88களில், இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கான உணவு இறுப்பு இருந்த போதும், எம்.எஸ்.கொஸ்டா என்ட் கம்பனி என்ற நிறுவனத்திடம் இருந்து பொதி செய்யப்பட்ட உணவுகளை அவர்கள் இருவரும் விநியோகித்துள்ளனர்.
இதுதொடர்பில் அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்கவில்லை. இது இராணுவ சட்டத்தின் படி குற்றமாகும்.
இந்திய மத்திய புலனாய்வு துறை நீதிமன்றத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், நேற்றையதினம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இரண்டு அதிகாரிகளுக்கும் இரண்டரை ஆண்டுகள் சிறைதண்டனைவும், ஆயிரம் ரூபாய் நட்டமும் அறவிட்டு உத்தரவிப்பட்டது.
குறித்த உணவுகளை விநியோகித்திருந்த நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டபணம் அறவிட உத்தவிடப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten