தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

முல்லைக் காடுகளில் எல்லாம் எலும்புக் கூடுகள்(புகைப்படம் இணைப்பு) !



இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் உள்ள முல்லைத்தீவின் சில காட்டுப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தென்னிலங்கையில் இருந்துசென்ற சில சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு சென்றுள்ளார்கள். அங்கே அவர்கள் பார்த்த காட்சிகளால் அவர்களே ஆடிப்போயுள்ளார்கள். பல இடங்களில் மண்டை ஓடுகள் காணப்படுவதாகவும், சில உடலங்கள் அரைகுறையாக எரியூட்டப்பட்ட நிலையில், எலும்புகள் மட்டுமே மிஞ்சிய நிலையில் இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். 

கை எலும்புகள் பிறிவாகவும் கால் மற்றும் மண்டை ஓடுகள் பிறிவாகவும் சில இடங்களில் காணப்படுவதாக இவர்கள் தெரிவிப்பதைப் பார்த்தால், இவ்வுடலங்களை இராணுவத்தினர் எரித்திருக்கவேண்டும். இல்லை எனில் போரின்போது , இவ்விடத்தில் போடப்பட்ட பாரிய குண்டுகளால் மக்கள் அங்கங்களை இழந்து அவ்விடத்தில் கொல்லப்பட்டிருக்கவேண்டும். எது எவ்வாறாயினும், இப்போரின்போது தமிழர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தாம் கரிசனைகொள்வதாகவும், ஒரு இடத்திலேயே இவ்வளவு எலும்புக்கூடுகள் இருக்கும் என்றால், புதுமாத்தளான் , சாலை, ஆனந்தபுரம், வெள்ளமுள்ளிவாய்க்கால், மற்றும் முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படும் என தென்னிலங்கை வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பிட்ட இப் புகைப்படத்தில் காணப்படும் எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதாக இருக்கலாம் எனவும், அதன் அருகே உக்கிப்போன ஆடைகள் பல இருந்ததாகவும் மேலும் அறியப்படுகிறது. இதன் அருகே பாரிய குழிகள் வெட்டப்பட்டு உள்ளதுபோன்ற நிலத்தோற்றம் காணப்பட்டதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten