[ வியாழக்கிழமை, 30 மே 2013, 12:00.09 AM GMT ]
நேற்று புதன்கிழமை காலை சென்னையிலிருந்து கொழும்பு வந்த ஜெட் எயார் வேஸ் விமானத்தில் வந்திறங்கிய இரண்டு பயணிகளின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது 120 சற்றலைற் ரீவி ரிசீவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தையொருவருக்கு அனுராதபுர உயர் நீதிமன்றம் 39 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது
இவ்விருவருக்கும் தலா 5000 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று மற்றுமொரு பயணியின் பயணப் பொதியை சோதனையிட்டபோது அதில் 250 கருக்கலைப்பு மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவருக்கும் 10,000 ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டது.
மேலும், விமானத்திலிருந்து வந்த பயணப் பொதிகள் சில உரிமை கோரப்படாத நிலையில் இருப்பது கண்டு சோதனையிட்ட போது அதில் 65 சற்றலைற் ரீ.வி. ரிசீவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் 150 கிலோ எடை கொண்ட பெரிய வெங்காய விதைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னையிலிருந்து ஜெட் எயார் விமானம் தரையிறங்கிய போது விமான நிலைய சுங்கப் பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
சோதனை நடவடிக்கைகள் கெடுபிடிகள் அதிகமாக காணப்பட்டதால் 65 சற்றலைற் ரிசீவர்கள் மற்றும் பெரிய வெங்காய விதைகள் கொண்டு வந்தவர்கள் பயணப் பொதிகளை விமான நிலையத்தினுள்ளேயே விட்டுவிட்டு தலைமறைவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
பொருட்கள் அனைத்தையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட மொத்த சற்றலைற் ரிசீவர்களின் பெறுமதி சுமார் ஒன்பது இலட்சத்து 25,000 ரூபா என்றும், இவற்றைக் கொண்டு வந்த இருவரும் அடிக்கடி தமிழ்நாடு சென்று வருபவர்கள் என்றும் சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
பொதிகளை விட்டு தலைமறைவானவர்களை பொதியிலுள்ள கடவுச்சீட்டு இலக்கம், பயணச் சீட்டு இலக்கம் ஊடாக கண்டறிய விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு 39 ஆண்டுகால சிறைத்தண்டனை
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:04.37 AM GMT ]
16 வயதுக்கும் குறைந்த இரண்டு மகள்களை மிக மோசமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சட்ட மா அதிபரினால் குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தந்திரிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்வதாக குறித்த நபர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அனுராதபுர உயர் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார ரத்நாயக்க இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
தண்டனை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த நபர் பத்தாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
தனது மூத்த மகளை மிக மோசமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக குறித்த நபர் பத்தாண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தத் தண்டனைக் காலம் பூர்த்தியாவதற்கு முன்னதாகவே 39 ஆண்டு கால தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten