[ வியாழக்கிழமை, 30 மே 2013, 06:41.11 AM GMT ]
மர்மமான முறையில் நெஞ்சுப் பகுதியில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியிலிருந்து பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் காங்கேசன்துறை வீதியில் சிவதொண்டர் நிலையத்திற்கு அருகில் இருந்தே இவ்வாறு ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இடம்பெற்ற இச்சம்பவத்தில் 37 வயதுடைய இராஜேந்திரம் திருகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவருக்கு அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் காணப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வாக அமையாது!- பைசர் முஸ்தபா
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 07:14.09 AM GMT ]
வடமாகாண சபை தேர்தல்கள் தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வாக அமையாது என்று பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அது குறித்த விவாதங்களும் தற்போது இடம்பெறுகின்றன.
எனினும் அரசாங்கத்தின் உயர்மட்டங்கள் இதுவரையில் உத்தியோகபூர்வமாக இது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும் மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வுகள் வழங்கப்படுவதன் ஊடாக அரசியல் தீர்வு ஒன்றை வழங்க கூடியதாக இருக்கும்.
எனவே வடமாகாண சபைத் தேர்தலை நடத்தும் போது, அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அதிகாரப் பகிர்வுகளுடன் நடத்துவது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten