தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

மட்டு.நுழைவாயிலில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை!


படுகொலைகள், கப்பம் பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டி தலைவர் கைது!
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 03:04.31 PM GMT ]
பல்வேறு படுகொலைகள் மற்றும் கப்பம் பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே. கணேசநாதன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட இந்த பாதாள உலகக் கோஷ்டி தலைவரிடமிருந்து நவீன கைத்துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் கத்தி உட்பட பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அமரசிங்க ஆராய்ச்சிலாகே சுஜித் கிரிசாந் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
மினுவாங்கொடையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை உட்பட நீர்கொழும்பு பகுதிகளில் இடம் பெற்ற பல கொலைகளுடன் இவர் தொடர்புபட்டவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 6ற்கும் மேற்பட்ட கொலைகளுடன் தொடர்புபட்ட இவருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த நபர் பெயரை மாற்றி புதிய அடையாள அட்டைகளைப் பெற்று வேறு பெயரில் செயற்பட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி தலைவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணையை அடுத்து நீதிமன்றத்தில் இவர் ஆஜராக்கப்படவுள்ளார்.
மட்டு.நுழைவாயிலில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 03:05.53 PM GMT ]
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு வரவேற்பு பகுதியில் சிலை வைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பிரதேச மக்களும் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, இதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொதுத் தொல்லை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரினர்.
பொலிஸாரின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் என்.எம்.எம். அப்துல்லாஹ், அப்பகுதியில் புத்தர் சிலை வைப்பதற்து தடை உத்தரவை பிறப்பித்ததோடு அதற்கான வேலைகளையும் நிறுத்துமாறும் உத்தரவிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten