வெளிநாட்டு பயணியிடம் 20 டாலர் ஏமாற்றிய இமிகிரேஷன் அதிகாரி சிக்கினார்:
27 May, 2013 by admin
கடந்த 16ம் திகதி இலங்கைக்குச் சென்ற வெள்ளைக்காரர் ஒருவரிடம் இருந்து 20.00 டாலரைப் ஏமாத்தி பெற்றுக்கொண்ட, இலங்கை இமிகிரேஷன் அதிகாரி குறித்து 20.05.2013 அன்று அதிர்வு இணையம் செய்தி வெளியிட்டு இருந்தது யாவரும் அறிந்ததே. குறிப்பிட்ட சுற்றுலாப் பயணி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆங்கில இணையம் ஒன்றில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். 2 நாட்கள் இலங்கையில் தங்க, விசா கட்டணம் அறவிடப்படுவது இல்லை. ஆனால் குறிப்பிட்ட இந்த வெள்ளைக்காரப் பயணியிடம், இலங்கை இமிகிரேஷன் அதிகாரி ஒருவர் பணமாக 20.00 டாலரைப் பெற்று, விசாவைக் குத்தி அனுப்பியுள்ளார். இப் பிரச்சனை ஊடகங்களில் வெளியானதால், இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது.
இவ்வாறு திருட்டுத்தனமாக சுற்றுலாப் பயணியை ஏமாற்றி பணம்பெற்ற அவ்வதிகாரியை தாம் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அவரை தாம் தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கியுள்ளதாகவும், தொடந்து அவர் மீது சுயாதீன ஆணைக்குழு ஒன்று விசாரணைகளை நடத்தும் என்று அது மேலும் அறிவித்துள்ளது.

அடேல் பாலசிங்கம் தொடர்பாக சிங்களம் ஏன் அறிக்கை விடுகிறது ?
27 May, 2013 by admin
விடுதலைப் புலிகளின் முன் நாள் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மனைவி அடேல் பாலசிங்கம் தொடர்பாக சிங்கள ஊடகங்கள் ஏன் அதிக நாட்டம் காட்டிவருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. சில சிங்கள ஊடகங்கள் அவர் பெண் போராளிகளுடன் நிற்க்கும் செய்திகளை அவ்வப்போது பிரசுரித்து சில செய்திகளை வெளியிடுகிறது. வேறு சில சிங்கள இணையங்கள் அவர் லண்டனில் பாதுகாப்பாக வாழ்வதாக செய்தி வெளியிடுகிறது. அடேல் பாலசிங்கம் தொடர்பாக சிங்கள ஊடகங்கள் ஏன் செய்திகளை அவ்வப்போது கட்டவிழ்த்து விடுகிறது என்று பலரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். அதுமட்டுமல்லாது சிங்கள ஊடகங்கள் வெளியிடும் இச் செய்தியை தமிழாக்கம் செய்து போடவும் சில தமிழ் இணையங்கள் பின் நிற்பது இல்லை என்பது ஆச்சரியப்படவேண்டிய விடையமாக உள்ளது.
லண்டனில் வசித்துவரும் அடேல் பாலசிங்கம் அவர்கள், திரைமறைவில் இருந்துகொண்டு பல காரியங்களை முன்னெடுத்து வருவதாக இலங்கை அரசு இன்று வரை நம்புகிறது என்பதுதான் உண்மை நிலை. எனவே அதனை கவுண்டர் பண்ண அவர்கள் பாவிக்கும் ஆயுதம் தான் இந்த ஊடக அறிக்கைகள் ஆகும். ஆனால் அடேல் பாலசிங்கம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு மிகவும் வயதான காலகட்டத்தில் உள்ளார். அவர் பொது நிகழ்சிகளில் கூடப் பங்குகொள்வது இல்லை. இன் நிலையில் உள்ளவர் எவ்வாறு செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும் ? இதனை இலங்கை அரச புலனாய்வாளர்கள் அறியவில்லை என்றால், அதுவும் வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும்.
இருப்பினும் அடேல் பாலசிங்கம் அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு செய்தியை எழுதாவிட்டால் சிங்கள அரசுக்கு தூக்கம் வராது என்ற நிலைதான் காணப்படுகிறது. அவர் லண்டனில் பாதுகாப்பாக உள்ளார் ! லண்டனில் சாப்பிடுகிறார் என்று எதனையாவது எழுதவேண்டும். இதுவும் சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten