தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழு சீனா பயணம்! இந்திய புலனாய்வு அமைப்பு "றோ' யாழில் ரகசியப்பேச்சு!


யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவியும் எரிப்பு
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 06:49.00 AM GMT ]
யாழ்.பல்கலைக்கழக மாணவிகளுடன் பாலியல் ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள முயன்ற பொருளியல் துறை விரிவுரையாளர் செ.இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் இளங்குமரனது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
பெருமளவான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலைப்பீடம் சார்பில் அவசர கோரிக்கை என்னும் பெயரில் இம்மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாணவர்களது இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழக சூழலில் பெருமளவான இராணுவப் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்தனர்.
இரண்டாம் இணைப்பு-
யாழ். பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை விரட்டுமாறு மாணவர்கள் ஆர்பாட்டம்!
யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் கல்வி கற்பிற்கும் பேராசிரியர் ஒருவரினால் கல்வி கற்கும் மாணவிகளுக்கு உடலியல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைக் கொடுத்த பேராசிரியரை உடனடியாக இப் பல்கலைக்கழகத்தை விட்டு விரட்ட வேண்டும் என மாணவ, மாணவிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் இன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரை மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாணவர்களால் பேராசிரியரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
குறித்த பேராசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான தொல்லைகள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பேராசிரியர் மீது மாணவர்களால் முன்வைக்கப்பட்ட 25 குற்றசாட்டுக்களில் முக்கியமானவை,
01) மாணவிகளிடம் தொலைபேசி எண் தருமாறு வற்புறுத்தல், பெண்களை தனியாக அறைக்கு வருமாறு கூப்பிடுதல், பரீட்சை வினாத்தாள்கள் எடுப்பதற்கு ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக வரவேண்டும் என வற்புறுத்துகின்றமை.
02) தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு குறுந்தகவல் அனுப்பியமை, தனக்கு எதிராக செயற்படுபவர்களை காட்டித்தருமாறு வற்புறுத்தியமை, தன்னுடைய பாடத்தை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியமை, இதனோடு பரீட்சை வினாத்தாளில் பெயர் எழுதும்படி வற்புறுத்தியமை.
03) குறைந்த புள்ளி எடுப்பவர்களைத் தனது பிரத்தியேக அறையில் வந்து சந்திக்கும்படியும் சந்தித்தால் மட்டுமே புள்ளி வழங்குவேன் என்றும் கூறியமை, தனது பிரத்தியேக அறைக்கு 2 மணிக்குப் பின்னர் தனியாக வந்து சந்திக்க கூறுகின்றமை.
04) தன் செயற்பாடுகளுக்கு உடன்பட்டால்தான் நல்ல புள்ளிகளை வழங்குவேன் என அச்சுறுத்துகின்றமை, தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்கு இறுதியாக புள்ளிச் சான்றிதழ் வழங்கும் போது இது முழுமையான பட்டம் அல்ல என எழுதி விடுவேன் எனப் பயமுறுத்தியமை.
05) துணைப் பாடமாகத் தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்குத் தற்காலிக விரிவுரையாளர் பதவியை வழங்க மாட்டேன் எனக் கூறியமை, துணைப் பாடத்தனை வேறு துறைகளிலோ வேறு பாடங்களிலோ எடுக்க கூடாது என வற்புறுத்துகின்றமை.
06) தனியாக சந்திக்கும் மாணவிகளிடம் பரீட்சை விடைத் தாள்களின் பின்னர் வெற்றுத் தாளைகளைச் சேர்த்துக் கட்டுமாறு தனக்கு இசைவாக நடக்கும் பட்சத்தில் உயர்ந்த புள்ளிகளை வழங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என கூறுகின்றமை.
07) தொலைபேசி எண் கேட்டபோது தொலைபேசி இல்லை எனப் பதில் கூறியமைக்கு புதிய தொலைபேசி வாங்கித்தரவா? எனக் கூறியமை, தொலைபேசி எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பியபோது அதற்கு பதிளிக்காத மாணவிகளை அறைக்குள் அழைத்து மிரட்டியமை.
08) அனைத்து மாணவிகளுடைய விபரங்களையும் பதிவாளர் அறையில் சென்று முகவரி உட்பட அனைத்து விடயங்களையும் பெறுவேன் என மிரட்டியமை, தனக்கு இசைவாகாத எந்தவொரு மாணவியையும் சிறப்புக் கலைப் பாடத்தலிருந்து பொதுக்கலைப் பாடமாக மாற்றி வெளியேற்றுவேன் என கூறுகின்றமை.
09) தொலைபேசி எண் கேட்டுக் கொடுக்காத பெண் பிள்ளைகளுக்கு இறுதிப் பரீட்சைக்கு கையொப்பம் இடமாட்டேன் என்று மறுத்துள்ளமை.
10) வகுப்பறையில் பரீட்சையில் குறைந்த புள்ளி எடுத்த ஆண் மாணவர்களை ரியூட்டோரியல் எழுதித் தரும்படியும் பெண் பிள்ளைகளைத் தனித்தனியாக தனது அறையில் சந்திக்கும்படியும் கூறியமை.
11) அவருக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட பொது அதற்குக் காரணம் பொருளியல்துறை மாணவிகளே எனக் கூறி அதற்காகவே முதலாம் பருவ Mathematics Paper பரீட்சையில் மிகக் கடினமாகப் போட்டேன் என வகுப்பறையில் கூறியமை.
12) தான் கூறும் விடயங்களை வெளியில் கூறக் கூடாது என்றும் அப்படிக் கூறும் பட்சத்தில் நீங்கள் எப்படி சித்தியடைந்து போவீர்கள் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன் எனவும் வகுப்பில் கூறியமை.
13) பீடாதிபதிக்கோ ஏனையோர்களுக்கோ தான் கட்டுப்பட மாட்டேன் என்றும் ஏனைய விவுரையாளர்களைக் கூடப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்றும் அதற்கேற்ப மாணவர்களை நடந்து கொள்ளும்படியும் கூறியமை.
மேற்குறித்த பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் ஒன்றியதினால் இவ்விடயம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பேராசிரியர் அவரது பதவியில் கடந்த மாதம் 16ஆம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்தன.
இவ்விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத்திடம் உள்ளக விசாரணையை மேற்கொள்ளுமாறே முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இப்பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டு மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை யாழ். பல்கலைக்கழக பேராசிரியர், விரிவுரையாளர்கள் உள்ளடக்கிய ஐந்து பேர் மாணவிகளுடன் தொடர்ந்தும் பாலியல் ரீதியான தொல்லைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இரு பேராசிரியர்களது பெயரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழு சீனா பயணம்! இந்திய புலனாய்வு அமைப்பு "றோ' யாழில் ரகசியப்பேச்சு!
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 05:57.04 AM GMT ]
இந்திய புலனாய்வு அமைப்பான "றோ' வின் உயரதிகாரி ஒருவர் நேற்று யாழ். மாவட்ட படைத் தளபதியை பலாலியில் சந்தித்து ரகசியப்பேச்சு நடத்தியுள்ளார்.
"றோ'வின் உயர்அதிகாரி எல்.ஐ.என்.ஜி.லங்கா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் யாழ். குடாநாட்டுக்கு நேற்றுப் புதன்கிழமை இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்கவை பலாலியில் சந்தித்து ரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் பேச்சின் போது ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை. யாழ். மாவட்டத் தளபதியை "றோ' அதிகாரி சந்தித்துப் பேசினார் என்பதை இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
அத்துடன் பலாலியில் நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றிலும் இந்தக் குழுவினர் கலந்துகொண்டனர் எனத் தெரியவந்தது. 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்தியப் படையினர் நினைவாக பலாலி விமான நிலையத் தளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கும் இவர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் சீனா சென்றுள்ள நிலையில், இந்தியப் புலனாய்வாளர் யாழ்ப்பாணத்துக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten