தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

அரசாங்கம் அதிகாரத்தை குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றது!– ஐ.தே.க

கொழும்பில் சட்டவிரோத அதி நவீன ஸ்கானர் ஒன்று மீட்பு! இரண்டு சந்தேகநபர்களும் கைது!
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 02:51.03 PM GMT ]
கொழும்பு, புறக்கோட்டையில் அதி நவீன ஸ்கானர் ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த ஸ்கானர் மீட்கப்பட்டுள்ளது.
நாட்டில் பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியான அனுமதியற்ற நிலத்தை கண்காணிக்கக் கூடிய ஸ்கானர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கானர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது எனவும், நிலத்தின் கீழ் 100 அடி வரையில் கண்காணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இயந்திரத்தை பயன்படுத்திய இரண்டு சந்தேக நபர்களும் ஏனைய சில உபகரணங்களையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் அதிகாரத்தை குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றது!– ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 02:48.22 PM GMT ]
 அரசாங்கம் அதிகாரத்தை குவிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அதிகாரத்தை பகிர்வதனை விடவும் அரசாங்கம் அதிகாரத்தை குவிப்பதில் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
 18ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசாங்கம் மேலும் நிறைவேற்று அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிகாரத்தை அறிமுகம் செய்த அதேவேளை, மாகாணசபைகளின் ஊடாக அதிகாரப் பகிர்வினையும் நாட்டுக்கு அறிமுகம் செய்தார்.
மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகம் செய்ய உள்ளதாக லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten