கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து இறந்துபோன போவத்த இந்திரட்ண தேரர் என்ற பௌத்த பிக்கு தற்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் அவர் ஒரு புனிதராக பௌத்தர்களால் காட்டப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு போக்கிரி என ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
குறித்த பௌத்த பிக்கு ஜோன் செனவிரத்ன மின்சார எரிசக்தி அமைச்சராக இருந்த காலப் பகுதியில் குறித்த அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் 20லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டியிருக்கின்றார்.
மேலும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 10லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டியிருக்கின்றார். இவற்றுக்கு எதிராக அமைச்சர் ஜோன் செனவிரத்ன பொலிஸில் முறைப்பாடு கொடுத்திருந்த போதும் குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்படவில்லை.
2012ம் ஆண்டு வீரகெட்டிய என்ற ஊரில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதும், அதே ஊரில் 2013ம் ஆண்டு பள்ளி வாசல் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தவரும் இவரே.
குறித்த பிக்கு இறப்பதற்கு 3 தினங்களுக்கு முன்னதாக நீதிமன்றினால் பிடிவிறாந்தும் இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த பிக்கு தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த தற்கொலைச் சம்பவத்தின் பின்னர் பிக்குவை ஒரு புனிதராக காட்டும் முனைப்புக்கள் நடைபெறுகின்றது.
இவற்றுக்கு மேல் குறித்த பிக்கு தீ மூட்டி கொழுத்தப்பட்டார் எனவும் அவர் தானாக தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் குறித்த இணையத்தளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதில் வெள்ளை நிற சேட் மற்றும் காற்சட்டை அணிந்துவரும் நபர், பிக்குவிற்கு தீ மூட்டுவது தெளிவாக தெரிகின்றமை இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.
மேலும் குறித்த பிக்கு தம்புள்ள பள்ளிவாசலுக்கு எதிராக அடாவடித்தனம் புரிந்தபோது அதனை தடுத்த இராணுவத்தினருக்கு தனது ஆடையை கழற்றி கூச்சல் போட்டவரும் இவரே. இவரையே சிங்கள பௌத்த இனவாதிகள் புனிதராக காட்ட முற்படுகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten