தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

சுவிற்சர்லாந்து பாணியிலான வெகுஜன வாக்கெடுப்பு நடாத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம்


அரசாங்க நிறுவனங்களின் எதேச்சாதிகார தீர்மானங்களினால் பாரிய நட்டம் (செய்தித்துளிகள் -3)
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:08.13 AM GMT ]
அரசாங்க நிறுவனங்களின் எதேச்சாதிகார தீர்மானங்களினால் பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு புறம்பாக சில அரச நிறுவனத் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இதனால் பாரிய பல கோடி ரூபா நட்டமடைகின்றது.
அண்மையில் சிவில் விமான சேவை அதிகாரசபையினால் மேற்கொண்ட நடவடிக்கையினால் நட்டம் ஏற்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகாரசபையின் மிகை லாப ஊதியக் கொடுப்பனவிற்காக மட்டும் 35 லட்ச ரூபா விரயமாக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சாரசபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் இவ்வாறு எதேச்சாதிகார தீர்மானங்களை எடுப்பதனால் பொதுமக்கள் பணம் விரயமாவதாக கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம் வருத்தம் வெளியிட்டுள்ளது,
வாக்காளர் பதிவு தொடர்பான திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
வாக்காளர் பதிவு தொடர்பான திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு இடம்பெயர் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி நாடாளுமன்றில் அவசர திருத்தச் சட்டமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த உத்தேச திருத்தச் சட்டம் உச்ச நீதிமன்றிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர் மக்களின் வாக்குரிமையை உறுதி செய்யக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக இடம்பெயர் மக்களின் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு தமிழ் முஸ்லிம் கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த திருத்தச் சட்டமானது ஓராண்டு காலத்திற்கு மட்டுமே அமுலில் இருக்கும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் சகல கைதிகளுக்கும் விசேட மருத்துவ பரிசோதனை
நாட்டின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல கைதிகளுக்கும் விசேட மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
சகல கைதிகளுக்கும் முழு அளவிலான மருத்துவ பரிசோதனையொன்று நடத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
கைதிகளின் உளவியல் பிரச்சினைகள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட உள்ளதாகத் n;தரிவிக்கப்படுகிறது.
முதல் கட்டமாக வெலிக்கடை, போகம்பரை மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கு பிரத்தியேக உளவியல் மருத்துவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
குறித்த சிறைச்சாலைகளுக்கு மூன்று அம்பியூலன்ஸ் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன.
மது மற்றும் போதைப் பொருள் பயன்பாடு காரணமாக கைதிகள் அதிகளவில் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது, 
சுவிற்சர்லாந்து பாணியிலான வெகுஜன வாக்கெடுப்பு நடாத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:05.49 AM GMT ]
சுவிட்சர்லாந்து பாணியிலான வெகுஜன வாக்கெடுப்பு நடாத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு, நாட்டு மக்களின் கருத்தை அறிந்து கொள்ள சுவறை்சர்லாந்தில் நடத்தப்படும் வெகுஜன வாக்கெடுப்பைப் போன்றதொரு வாக்கெடுப்பு நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் ஏதேனும் ஓர் விடயம் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு குறித்த காலப்பகுதிக்குள் குறிப்பிட்டளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் அது தொடர்பில் வெகுஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதற்கு அமைய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ள நிலையில், மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள சுவிஸ் மாதிரியிலான வெகுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சியை விடவும் இரத்தினபுரியில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாகவும், அவர்களும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோரினால் சிக்கல் நிலைமை ஏற்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten