தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

பிசுபிசுத்துப் போனது கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டம்


இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் திட்டமிடாது நடத்தப்பட்ட செயன்முறைப் பரீட்சைகள்!- ஆசிரியர்கள், மாணவர்கள் விசனம்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 05:56.46 PM GMT ]
இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வெளிவாரிப் பட்டதாரிப் பிரிவு மாணவர்களுக்கான சங்கீதம் மற்றும் நடனம் ஆகிய பாட செயன்முறைப் பரீட்சைகள் போதியளவு திட்டமிடப்படாத நிலையிலேயே நடாத்தப்பட்டதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வெளிவாரிப் பட்டதாரிப் பிரிவு மாணவர்களுக்கென நடாத்தப்பட்ட நடனம் மற்றும் சங்கீதம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இம்மாதம் 23ம், 27ம் திகதிகளில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டன.
ஒவ்வொரு மாணவர்களும் தமது துறைத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தமது செயன்முறை பரீட்சைகள் தொடர்பான திகதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளனர்.
உறுதிப்படுத்திக் கொண்ட மாணவர்கள் பலர் பரீட்சைக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாக தள்ளப்பட்டனர்.
மன்னாரிலிருந்து நடன பாட பரீட்சைக்கு துறைத்தலைவரின் அனுமதியுடன் வந்த மாணவியொருவர் நடன உடையணிந்து பரீட்சை நடைபெறும் இடத்தில் காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளார்.
இதேபோல் சங்கீத பரீட்சைக்கான போதிய ஏற்பாடுகள் இல்லாத நிலையில் மாணவர்கள் சிரமப்பட்டுள்ளனர்.
நடனப் பரீட்சையின் போதும் அதிகளவான மாணவர்கள் காலை முதலே நடனத்திற்கான உடையணிந்து கொண்டு நீண்ட நேரம் தமது பரீட்சைக்காக காத்திருந்துள்ளனர்.
நடன உடையணிந்த நிலையில் இவர்கள் தமக்கான உணவினைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீடத்தில் சிற்றுண்டிச்சாலை இல்லாததால் காரணத்தினால் நடன உடையில் வெளியே செல்ல முடியாத நிலையில் இவர்கள் மிகவும் கஸ்ரங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களோடு பரீட்சைக்கான மாணவர்களை அழைத்து வந்த பிரபல ஆசிரியர்களும் நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பாலியல் குற்றஞ்சாட்டுக்கள் காரணமாக சங்கீத துறையின் விரிவுரையாளர் பதவி  தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிசுபிசுத்துப் போனது கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டம்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 05:01.33 PM GMT ]
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கெதிராக பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் மாணவர்கள், பல்கலைக்கழக ஏனைய சங்கங்கள், ஆசிரியர்களின் பெரும்பாலானவர்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக பிசுபிசுத்துப் போனதைக் காணக்கூடியதாக இருந்தது.
இன்றைய தினம் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், விரிவுரைகள், பரீட்சைகள் நடைபெற்றதுடன், ஏனைய பல்கலைக்கழக நடவடிக்கைகளும் வழமைபோன்று நடைபெற்றன.
இந்தப் போராட்டம் குறித்தும் அதன் உண்மை நிலை குறித்தும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றும் வெளியாகியிருந்தது.
இந்தத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அன்பிற்கினிய மாணவர்களே, கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களே என்று பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அத்துடன், அபிவிருத்திகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப் பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி இவற்றினை நிறுத்தி நாசப்படுத்திவிட முயற்சிகளை மேற்கொள்வது சமூகத்தில் அக்கறை இன்மையாகவே பார்க்கப்பட வேண்டும்.
அதே நேரம், இவ்வாறான நடவடிக்கைகள் குறித்த உண்மை நிலைமைகளை அறிந்து அனைவரும் செயற்பட வேண்டும் எனப் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று நடத்திய இன்றைய போராட்டம் முழுமையாக வெற்றியளிக்கவில்லை என்பதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் வழமைபோல முன்னெடுக்கப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள் தெரிவித்தனர்.
உபவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்து அதற்கு எதிராக நடத்திய அடையாள பணி நிறுத்த போராட்டம், பல்கலைக்கழக நடவடிக்கைகள் எதனையும் பாதிப்புறச் செய்யவில்லை என்றும் கிழக்குப் பீடாதிபதிகள் தெரிவித்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான ஆசிரிய சங்க உறுப்பினர்கள் ஆசிரியர் தொழிற் சங்க அடையாள பணி நிறுத்தத்தைப் புறக்கணித்துவிட்டதாகவும் பீடாதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten