சைக்கிள் காப்பில் தப்பியோடி புலிகள் உறுப்பினர் இவர்தான் !
30 May, 2013 by admin
புலிகளுக்கு பொருட்களை வழங்கிய ஜெயலத் ஜெயவர்த்தன காலமானார் !
30 May, 2013 by admin
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையை சுணாமி தாக்கியது. அதன் பின்னர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி இலங்கையில் முதன் முதலாக தமிழீழத்தில் தான் சுணாமி அவதானிப்பு நிலையம் திறக்கப்பட்டது. இதனால் சிங்களதேசமே அதிர்ந்து போனது. ஒரு அரசாங்கமாக நாம் இருந்தும் இதனைச் செய்யமுடியவில்லை. ஆனால் புலிகள் எப்படி அவதானிப்பு நிலையத்தை திறந்தார்கள் என்று சிங்களவர்கள் நினைத்தார்கள். அவ்வேளை தென்னிலங்கையில் இருந்து உதவிப் பொருட்களோடு துணிச்சலாக கிளிநொச்சிக்கு வந்த மனிதர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா ஆகும். அபாயச் சங்கொலி எழுப்பும் கருவிகளை அவர் தனது சொந்தக் காசில் வாங்கிவந்து, புலிகளின் சுணாமி அவதானிப்பு நிலையத்துக்கு வழங்கியிருந்தார். அங்கே இருந்த பிரம்மாண்டமான தேசிய தலைவரது புகைப்படத்தைப் பார்த்து அவர் கை கூப்பி கும்பிட்டுவிட்டு நகர்ந்தார்.
பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களையும் அவர் சந்தித்துவிட்டுச் சென்றிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவைப் பிரிக்க ஐக்கிய தேசிய கட்சி செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, அக் கட்சியிலும் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதகு இவரே நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார் என்பதனை எவராலும் மறுக்கமுடியாது.
Geen opmerkingen:
Een reactie posten