தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

திருமலை மாணவர் படுகொலை மூதூர் ஊழியர்கள் படுகொலை! விசாரணை ஆணைக்குழுவுக்கு என்ன நடந்தது?- இரா. சம்பந்தன்


ஏடிஎம் அட்டை மோசடி! தாய்லாந்தில் இலங்கைத் தமிழர்கள் 4 பேர் கைது! சென்னையில் விசாரணை
[ புதன்கிழமை, 29 மே 2013, 12:23.48 AM GMT ]
தமிழகத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற இலங்கை தமிழர்கள் 4 பேரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்ட முரளீதரன், பிரசாத், சுந்தரேசன், சந்திரசேகர் ஆகிய நால்வரையும் விமானம் மூலம் சென்னை அழைத்துவந்த கியூ பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து சர்வதேச அளவில் மோசடியில் ஈடுபட்ட வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் சுற்றுலா விசா மூலம் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களையும் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்க பண்படுத்தும் கருவிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைதானவர்கள் அளித்த தகவளின் பெயரிலேயே இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையிலும் பல்வேறு ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட கொள்ளையர்களின் திட்டங்களும் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழர்கள் 4 பேரிடமும் கியூ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் இணைப்பு
ஏடிஎம் கார்ட் மோசடி - தாய்லாந்தில் வைத்து கைது செய்த 4 இலங்கைத் தமிழர்களை சென்னைக்கு கொண்டு வந்தது கியூ பிரிவு!
மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்தது பொலிஸ் தீவிர விசாரணை நடத்தியதில் மதுரை கே.கே.நகரை சேர்ந்த பாலாஜி, செல்லூரை சேர்ந்த முத்துக்குமார், கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஹபீப், ரகுமான் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 60-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகள், 6 செல்போன்கள் மற்றும் கொம்பியூட்டர், லப்டப், போலி ஏ.டி.எம். கார்ட் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் ரூ.3 லட்சம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில்  20-க்கும் மேற்பட்ட கும்பலால் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி கும்பல்களின் தலைவராக இலங்கைத் தமிழர்களான முகுந்தன், சுனில் இருந்து வருவது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் கனடா, இந்தோனேஷியா நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் துப்பு துலங்கியிருக்கிறது.
எனவே இவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸ் உதவியை கியூ பிரிவு பொலிஸார் கேட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் வங்கி கணக்குகளை குறி வைத்து இந்த கும்பல் மோசடி செய்துள்ளது.
இதுவரை பல கோடி மதிப்பில் மோசடி நடத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலர் வேறு நாடுகளிலும் பதுங்கி உள்ளனர். அவர்களை பிடிக்கவும் பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த கும்பலில் தொடர்புடைய இலங்கை தமிழர்களான முரளீதரன், பிரசாத், சுந்தரேசன், சந்திரசேகர் ஆகிய 4 பேரும் தாய்லாந்தில் இருந்து பாங்கொக்கிற்கு தப்பிச் செல்வதாக சர்வதேச பொலிஸ் உதவியால் தமிழக கியூ பிரிவு பொலிஸாருக்கு துப்பு கிடைத்தது.
அவர்கள் உதவியுடன் கியூ பிரிவு பொலிஸார் டி.எஸ்.பி. செல்லத்துரை தலைமையில் பாங்கொக்கில் வைத்து 4 பேரையும் கைது செய்து நேற்று செவ்வாயக்கிழமை சென்னை கொண்டு வந்தனர். அவர்களை இரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
திருமலை மாணவர் படுகொலை மூதூர் ஊழியர்கள் படுகொலை! விசாரணை ஆணைக்குழுவுக்கு என்ன நடந்தது?- இரா. சம்பந்தன்
[ புதன்கிழமை, 29 மே 2013, 01:50.27 AM GMT ]
திருகோணமலையில் மாணவர்கள் ஐவர் கொலை செய்யப்பட்டமை, மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை போன்ற மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் என்ன? நடந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2008 ம் ஆண்டு விவாதிக்கப்பட்ட குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சிகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு என்ன நடந்தது என்றும் அவா் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த சட்டமூலத்தின் பிரதியும் ஹன்சாட் பிரதிகளும் என்னிடம் உள்ளன என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இது தொடர்பிலான விவாதம் யூன் 19 வரையிலும் நடைபெற்றது என்று தெரிவித்துள்ளதுடன், அந்த சட்டமூலத்தை அரசாங்கம் கைவிட்டு விட்டதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
திருகோணமலையில் மாணவர்கள் ஐவர் படுகொல செய்யப்பட்டமை, மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை போன்ற மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் தொழிற்பாட்டை அவதானிக்கவென அரசாங்கம் நியமித்த சர்வதேச சுதந்திர முக்கியஸ்தர்கள் குழுவின் அழுத்தம் காரணமாகவே இந்த சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், இலங்கை அரசாங்கத்தின் பராமுகம் மற்றும் அசமந்த போக்கினால் விசனமடைந்த இந்த குழு நாட்டை விட்டே வெளியேறிவிட்டது.
அந்த ஆணைக்குழுவுக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் என்ன நடந்தது? என்றும் அவர் கேள்யெழுப்பினார்.

Geen opmerkingen:

Een reactie posten