[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 03:13.00 AM GMT ]
நியூஸிலாந்தின் வெளியுறவு அமைச்சர் முரே மெக்கலி எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தியாவில் அவர், வெளியுறவு அமைச்சரை சந்திப்பதுடன் வர்த்தகம் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திக்கவுள்ளார்.
இதன்போது நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மெக்கலி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக மெக்லி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து பிரதமர் இன்று இலங்கை வருகை
தாய்லாந்தின் பிரதம மந்திரி யின்லக் சின்வாத்ரா இரண்டு நாள் விஜயமாக இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் விசேட நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி செயலத்தில் வைத்து அவர் இன்று இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் பலவற்றில் கைச்சாத்திடவுள்ளார்.
அத்துடன் அவர் இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் தாய்லாந்து பிரதமர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர்களையும் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதியுடன் தாய்லாந்து பிரதமர் பேச்சுவார்த்தை!
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31ம் திகதி) இலங்கைக்கு வருகை தந்த தாய்லாந்தின் பிரதமர் யின்லக் சின்வாத்ரா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட நிகழ்வில் தாய்லாந்து பிரதமருக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன.
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தோர் அனைவரும் மீள்குடியமர்வு!- ஐ.நாவில் இலங்கை அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 03:29.03 AM GMT ]
சட்டவிரோத கொலைகள் மற்றும் உள்ளக இடப்பெயர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றபோது இலங்கையின் குழு இதனை அறிவித்தது.
2013 மார்ச் மாதத்தில் இடம்பெயர்ந்த அனைவரும் மீளக்குடியேற்றப்பட்டு விட்டதாக இலங்கைக் குழு தெரிவித்தது.
மெனிக்பாமில் இருந்து இறுதிக்கட்ட இடம்பெயர்ந்தோர் மீளக்குடியமர்த்தப்பட்டமையானது, இலங்கையில் நிலையான சமாதானத்துக்கான அடிப்படை என்றும் இலங்கைக் குழு குறிப்பிட்டது.
Geen opmerkingen:
Een reactie posten