[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 05:35.09 PM GMT ] [ பி.பி.சி ]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நண்பர் என்று கூறப்படும் குணசுந்தரம் ஜெயசுந்தரம் என்ற சந்தேகநபரை ஒரு மாதகால சிறைத்தண்டனையின் பின்னர் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் இணங்கியதாக கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு குறிப்பிடுகின்றது.
வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அறிவித்த பின்னர் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேகநபர் ஒரு கோடீஸ்வர வர்த்தகர் என்றபடியாலேயே அரசாங்கம் அவருக்கு சார்பாக நடந்து கொண்டுள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பணபலமும் அரசியல் செல்வாக்கும் கொண்ட சந்தேகநபர்களுக்கு அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்குவதையே இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறே, அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆனால் சாதாரண கைதிகளுக்கு இவ்வாறான சலுகைகள் கிடைப்பதில்லை என்றும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ கூறினார்.
பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற, தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளும் சந்தேகநபர்களுக்கு குறைந்த தண்டனைகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிப்பதாக சட்டமா அதிபர் அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஏராளமான தமிழ்க் கைதிகள் குற்றங்களை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வு பெறுவதற்கு தயாராக இருக்கின்ற போதிலும் அவர்கள் இன்னும் சிறைகளில் வாடுவதாகவும் அவர்களின் தண்டனைகளை குறைப்பது பற்றி சட்டமா அதிபர் கரிசனை காட்டவில்லை என்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடமாகாண தேர்தல் தொடர்பில் அரசு அறிவித்த பின்னர்தான் கூட்டமைப்பு முடிவெடுக்கும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 03:44.32 PM GMT ]
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவா் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் சாராதவர்களின் கருத்துக்களுக்கு நாங்கள் பதிலளிக்கத் தேவையில்லை. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களின் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணா சபையின் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதனை கூட்டமைப்பு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய நாடுகள் தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும்!- சம்பந்தன்
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உதவிய நாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று திருகோணமலையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் சென்றுள்ளது. 2 கிலோ மீற்றர் வீதிக்காக எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.
விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதற்கு உதவிய நாடுகள், அது அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் எமக்கு தீர்வை பெற்றுத் தரவேண்டும். அவர்களுக்கு ஒர் கடமைப்பாடு உள்ளது.
சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையத்திற்காக எடுக்கப்பட்ட 50 ஏக்கர் காணி தவிர எனைய பகுதிகள் விடவிக்கப்படும் என பசில் ராஜபக்ஷ எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் வாக்குறுதியை மீறி அங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வடமாகாணத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார். அரசாங்கம் சாராதவர்களோடு நாங்கள் பேசுவதற்கு தயாராக இல்லை.
பன்முகப்படுததப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைத்த 5 மில்லியன் ரூபாய்கள் 11 கோயில்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தோடு இணைந்திருந்தால் 100 மில்லியன் ரூபாய்கள் வரை அபிவிருத்திக்காக கிடைக்கும். இதற்காக எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது என இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten