தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

மாத்தளை புதைகுழி பற்றிய அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மறைந்த ஜயலத்திற்கு ஜனாதிபதி இறுதி மரியாதை - யாழ் செல்ல தயாராகும் நாமல்
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 11:25.38 AM GMT ]
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.
அன்னாரது பூதவுடல் ஜா-எலயிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது வீட்டுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இறுதி மரியாதையை செலுத்தியதுடன் குடும்ப உறவினர்களுடன் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டார்.
நாமல் ராஜபக்ஷ யூன் மாதம் 2 ஆம் திகதி யாழ். விஜயம்!
நாடாளுமன்ற உறுப்பினரும் நாளை இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ ஜுன் மாதம் 2 ஆம் திகதி யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு பாடசாலை மாணவர்களை தெரிவு செய்யும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ செல்லவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் ஏற்பாட்டிலேயே இந்த தெரிவு இடம்பெறவிருக்கின்றது.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 15 வயதுக்கு கீழ்பட்ட உதைப்பந்தாட்ட வீரர்கள் 200 பேருக்கு பயிற்சி அளிக்கவுள்ளது. அவர்களில் 30 பேரை தெரிவு செய்து தேசிய உதைப்பந்தாட்ட அணியில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த பயிற்சிகள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாத்தளை புதைகுழி பற்றிய அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 10:38.46 AM GMT ]
மாத்தளை அரச மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் காணாமல் போனவர்களின் உறவினர்களைத் தெளிவுபடுத்தும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு மாத்தளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனது வேண்டுகோளின்படி மாத்தளை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக காணாமல் போனோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ச பிபிசியிடம் தெரிவித்தார்.
1988-89 ஆண்டு காலப்பகுதியில் காணாமல்போயுள்ள 24 நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தாம் நீதிமன்றத்தில் மனுக்களை சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் மாத்தளைப் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாகவும், ஆனால் சட்டவிதிகளின் பிரகாரம் காவல்துறையினர் இந்தப் புதைகுழி தொடர்பாக காணாமல் போனோரின் உறவினர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகை அறிவித்தல்களை இதுவரை வெளியிடவில்லை என்பதையும் தாம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதாகவும் சட்டத்தரணி கூறினார்.
இந்த அறிவித்தல்களை மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளில் வெளியிடுமாறு மாத்தளை நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் 28-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
மாத்தளை மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச பொலிஸ் விசாரணை
மாத்தளை மனித புதைக்குழி விவகார வழக்கு மாத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (31ம் திகதி)  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேலதிக விசாரணைகளுக்கென சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சர்வதேச பொலிஸாரின் விசாரணையை அடுத்து டி.என்.ஏ பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்ததாக ஜேவிபி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு பொது பயன்பாட்டு வழக்கு என்பதால் வழக்கில் பங்குகொள்ள மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு அறிந்து கொள்ளும் பொருட்டு சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் பகிரங்க விளம்பரம் வெளியிடுமாறு குற்ற விசாரணை திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, இந்த வழக்கிற்கு இன்றைய தினம் மேலும் 22 சத்தியவாக்குமூல மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இன்றைய வழக்கு விசாரணையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அநுர மெத்தேகொட கலந்து கொண்டதாகவும் ஜேவிபி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்ற விசாரணை பிரிவினர் வாக்குமூலம் பெற்ற போது மேலும் 6 பேர் முறைப்பாட்டாளர்களாக வழக்கில் இணைந்து கொண்டுள்ளதாக அப்பிரிவு கூறியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் சுனில் வட்டகல உள்ளிட்ட 10 சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளதுடன் ஜேவிபி சார்பில் பா.உ அநுரகுமார திஸாநாயக்கவும் சமூகமளித்ததாக ஜேபிவி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten