தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

13ஆவது சீர்திருத்தத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது!- ரவூப் ஹக்கீம்


புதிய இந்தியத் தூதுவர் அடுத்த மாதம் பதவியேற்பு! பௌத்த பூமியில் பணியாற்ற விருப்பம் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 01:12.32 PM GMT ]
 இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள வை.கே. சின்ஹா எதிர்வரும் ஜூன் மாதம் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அவருக்கான பதவியினை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்தப் பதவியை மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், பௌத்த பூமியான இலங்கையில் கடமையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெனிசுலாவிற்கான தூதுவர், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கான இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் இராஜதந்திர பதவிகளை சின்ஹா வகித்துள்ளார்.
இதுவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்திருந்த அசோக் கே. காந்தா இம்மாதத்துடன் தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு தாயகம்  திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது சீர்திருத்தத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது!- ரவூப் ஹக்கீம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 01:26.50 PM GMT ]
அரசியலமைப்பின் 13ஆவது சீர்திருத்தத்தின் எந்தவொரு சரத்தையும் நீக்குவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க போவதில்லை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் அரசியல் அமைப்பில் நிரந்தரமாக இருக்கின்ற ஒரு திருத்தமாகத்தான் 13வது சட்டத் திருத்தத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோக்குகின்றது.
அந்த சட்டத் திருத்தத்தின் எந்த அம்சத்தையும் அகற்றுவதற்கு அது பொலிஸ் அதிகாரங்களாக இருந்தாலும் சரி, காணி அதிகாரங்களாக இருந்தாலும் சரி அகற்றுவதற்கு எந்த விதத்திலும் உடந்தையாக இருக்கமாட்டோம்.
13வது சட்டத் திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களை விடவும் கூடுதலாக அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்குகின்ற ஒரு திருத்தத்தை கொண்டு வருவதை மாத்திரம் தான் நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten