[ valampurii.com ]
கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன.
அதேநேரம் பலாலிக்கும் இரத்மலானைக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமான சேவையும் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அதிரடியாகத் தேவைதானா? என்ற கேள்வி எழவே செய்யும்.
இந்திய வீடமைப்புத் திட்டம் இன்னமும் முழுமையடையாத நிலையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கு வீட்டுத் திட்டம் போதுமானதல்ல என்ற புள்ளி விபரங்களுக்கு மத்தியில், யாழ் - கொழும்புக்கு இடையில் அவசரமாக அரங்கேறும் அதிவேகப் பாதையானது முன்னுரிமை அடிப்படையில் வள ஒதுக்கீடு இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்கிறது.
தமிழர் பிரதேசங்களில் இன்னமும் மிதிவெடி அகற்றப்படாமல், உடைந்து போன வைத்தியசாலைகள் கட்டப்படாமல், மீள்குடியமரும் மக்களின் இருப்பிடங்கள் கவனிக்கப்படாமல் இருக்கும் போது, அது தொடர்பான திட்டங்களில் அல்லவா இலங்கை அரசும் சீனாவும் உடன்படிக்கை செய்ய வேண்டும்.
இதைவிடுத்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் அதிவேகப் பாதை அமைப்பது எந்தத் தேவை கருதியதென்ற சிந்தனையில், நீங்கள் வருவதற்கா? அல்லது நாங்கள் வருவதற்கா? என்ற புரியாத புதிர் எழுகை பெறுகிறது.
அதாவது எதிர்காலங்களில் வடமாகாணத்தில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகள் தொடர்பில் போராட்டங்களை முன்னெடுப்பார்களாக இருந்தால், அதனைத் தடுப்பதற்கும் அடக்குவதற்குமாகத் தென் பகுதியிலிருந்து துருப்புக்களையும் கனரக வாகனங்களையும் அதிவேகமாகக் கொண்டு வருவதற்கு அதிவேகப் பாதை வசதியாக இருக்கும் என்பதால், நீங்கள் வருவதற்காகவா? என்ற கேள்வி முன்னெழுகிறது.
மறுபக்கமாக 1958களில், 1983களில் நடந்த தென்பகுதிக் கலாசாரம் வரும் காலங்களில் அரங்கேறினால் சிதம்பரம் கப்பலுக்காக காத்திராமல் தமிழ் மக்களாகிய நீங்கள் அதிவேகமாக உங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை உதவும் என்பதால், நாங்கள் வருவதற்கா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது.
இதில் எது சரி என்பதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று கேட்பதற்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten