தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

நவநீதம்பிள்ளை ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறார்-இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்


தம்புள்ளை பிரதேச முஸ்லிம் மக்களை ஒரே நாளில் காலி செய்யச் சொல்வதாக மக்கள் புகார்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 03:20.11 PM GMT ]
இலங்கையில் தம்புள்ளை நகருக்கு அருகிலுள்ள பாதெனிய நகரில் பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாழ்பவர்கள், மாற்றுக் காணியோ அல்லது நஷ்ட ஈடோ வாங்கிக்கொண்டு அப்பிரதேசங்களில் இருந்து காலிசெய்ய வேண்டும் என்ற ஒரு உடன்பாடு சில காலம் முன்பு எட்டப்பட்டிருந்தது.
இக்குடும்பங்களை திங்களன்று அழைத்துப் பேசிய மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர், மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ கேட்காமல் உடனடியாக இடத்தை விட்டு அகலவேண்டும் என்று தெரிவித்ததாக ஒரு சில குடும்பங்கள் கூறுகின்றன.
ஒரு நாள் அவகாசத்தில் வீடுகள் இடிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் அவர்கள் முறையிடுகின்றனர்.
உடனடியாக இடத்தை விட்டு அகல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறும் சில பாதெனிய வாசிகள் தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு நியாயம் என்பதுபோல அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டினர்.
இப்பகுதியில் வாழும் சிங்கள குடும்பங்கள் சிலவற்றுக்கு மாற்றுக் காணி வழங்குவதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்துள்ளனர் என்று தாம் கேள்விப்பட்டதாக அவர்கள் கூறினர்.
மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ வழங்கப்படும் என உத்திரவாதம் அளிக்கும் ஆவணங்களைக் காட்டியபோதும், உத்தரவாதம் கொடுத்தவர்களிடம் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பல கலமாக தாங்கள் இப்பகுதியிலேயே வாழ்ந்து வருவதாகக் கூறும் இவர்கள், ஏற்கனவே நடந்த உடன்பாட்டின் கீழ் தமக்கு மாற்றுக் காணியோ நஷ்ட ஈடோ கிடைக்குமானால் இப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு தாம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
நவநீதம்பிள்ளை ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறார்-இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 02:54.14 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு விடுத்த அழைப்பை ஏற்றே நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வதாக இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 23 வது ஒழுங்குமுறை அமர்வின்போது இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் விஜயம், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உந்துதலை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நவநீதம்பிள்ளையின் விஜயம் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் இடையில் நற்புறவு ஏற்படும் என்றும் ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நவனீதம்பிள்ளை தலைமை தாங்கும் நிறுவனத்தில் நிதிச் சுயாதீனத்தன்மை கிடையாது - இலங்கை
நவனீதம்பிள்ளை தலைமை தாங்கும் நிறுவனத்தில் நிதிச் சுயாதீனத்தன்மை கிடையாது என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக நவனீதம்பிள்ளை கடமையாற்றி வருகின்றார்.
நாடுகளின் மனித உரிமை விவகாரத்தில் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் நவனீதம்பிள்ளை செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten