தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

ஜனாதிபதியின் மகன் ரோஹித்த தாக்குதல்! இலங்கை ரக்பி நடுவர்கள் விரக்தியால் ஓய்வு பெறுகின்றனர்!
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 03:33.05 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் ரக்பி போட்டி நடுவர்கள் பலரும் தொழில்களிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கம் கூறுகிறது.
இதனால் அடுத்து வரும் கழக மட்ட போட்டிகளின் போது பணியாற்றுவதற்கு கூட நடுவர்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கத்தின் தலைவர் ஓவில் பெர்ணான்டோ தமிழோசையிடம் கூறினார்.
கடந்த மார்ச் 5-ம் திகதி நேவி எதிர் பொலிஸ் கழகங்களுக்கு இடையிலான போட்டியொன்றில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன், 22 வயதான ரோஹித்த ராஜபக்ச திமித்ரி குணசேகர என்ற நடுவரை தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் சம்பவம் தொடர்பில் இலங்கை ரக்பி விளையாட்டுச் சங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்த முக்கிய நடுவர்களுக்கு அழுத்தம் காரணமாக தொழிலிருந்தே ஓய்வு பெற்றுச் செல்வதாகவும் ஓவில் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஒருமாத காலத்தில் மூத்த நடுவர்கள் நால்வர் ஓய்வு பெற்றுச் செல்வதாகவும் ரக்பி நிர்வாக சபை நடவடிக்கை எதுவும் உருப்படியாக எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என்றும் ஓவில் பெர்ணான்டோ கூறினார்.
வேறொரு போட்டி தொடர்பில் நடவடிக்கை
இதனிடையே, ரோஹித்த ராஜபக்சவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நடுவர் திமித்ரி குணசேகர மீது, வேறொரு போட்டியொன்று தொடர்பில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரும் இன்னொரு நடுவரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரோயல் எதிர் இசிபத்தனை கல்லூரிகளுக்கு இடையில் நடந்த போட்டியொன்றின் போது போட்டியை உன்னிப்பாக அவதானிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், அவர்களுக்கு ஒருமாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர இன்னொரு மூத்த நடுவருக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நடுவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். மொத்தமாக 4 நடுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை மட்டப் போட்டி ஒன்று தொடர்பில் நடுவர் திமித்ரி குணசேகர மீது போட்டித் தடை விதிக்கப்பட்டமைக்கும், அவர் ஜனாதிபதியின் மகனால் ஏற்கனவே கழக மட்ட
போட்டியொன்றில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் ஓவில் பெர்ணாண்டோ கூறினார்.
ஜனாதிபதியின் மகனால் ரக்பி நடுவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிய விசாரணைகளின் நிலை என்னவென்று இலங்கை ரக்பி சங்கத்தின் கருத்தை உடனடியாகப் பெறமுடியவில்லை.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 04:32.34 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் ப.தர்சானந் வீட்டின் மீது இன்று இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அதில் வீட்டின் கண்ணாடிகள் சில உடைந்துள்ளதாக தர்சானந் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten