தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

போரில் இடம்பெயர்ந்த சகலரும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்!– ரவிநாத் ஆரியசிங்க

புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்களிடம் கருத்து கோரும் நடவடிக்கை ஆரம்பம்
[ புதன்கிழமை, 29 மே 2013, 02:10.11 AM GMT ]
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் மக்களிடம் கருத்து கோரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இன்று நாடாளுமன்றில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், விருப்பு வாக்கு முறைமைக்கு பதிலாக தொகுதிவாரி முறைமையை அறிமுகம் செய்தல், நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடாத்தல், அரசியல் அமைப்பு தொடர்பான அர்த்த விளக்கத்தை அளிக்க விசேட நீதிமன்றமொன்றை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திருத்தங்கள் தொடர்பில் மக்களின் கருத்து கோரப்படும். புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஆட்சியாளர்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்காது, மக்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடிய வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரில் இடம்பெயர்ந்த சகலரும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்!– ரவிநாத் ஆரியசிங்க
[ புதன்கிழமை, 29 மே 2013, 01:59.10 AM GMT ]
 போரில் இடம்பெயர்ந்த சகலரும் மீள் குடியேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய நர்டுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மொத்தமாக 295, 873 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக பலாலி உள்ளிட்ட இராணுவ முகாம்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் அகற்றிக் கொள்வது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
மேலும் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விஸ்தரிக்க காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் போது காணிகளை இழப்போருக்கு நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.
போர் நிறைவடைந்த காலத்தில் இரண்டாயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன, தற்போது நூறு சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான பகுதியில் மட்டுமே நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளை தொடர வேண்டியுள்ளது என ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten