தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

இந்தியாவில் இலங்கை இளைஞர் கூலிப்படை: தனிப்படை தேடுதலாம் !


இந்தியா, அம்பத்தூர் தொழில் அதிபர் கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த இளைஞனை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் மேற்கு பானுநகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (44). திருமுல்லைவாயல் பகுதியில் கேபிள் டிவி, இரிடியம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மனைவி மனோன்மணி (40). இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 13ம் திகதி ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார்.

அம்பத்தூர் பொலிஸ் விசாரணைகளின் மூலம் ஸ்ரீதரை கொலை செய்தது அவரது மனைவி மனோன்மணி, இவரது தந்தை நாகரத்தினம், தம்பி ராஜா (39) ஆகியோர்தான் என்று தெரிந்தது. அவர்களை பொலிஸார் கைது செய்தனர். விசாரணையில், இரிடியம் தொழில் செய்ய மனைவியின் நகைகள் மற்றும் மாமனாரிடம் 5 லட்சம் வாங்கியுள்ளார். தொழிலில் நஷ்டம் அடைந்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. மேலும், கேபிள் டிவி வருமானத்தில் வந்த பணத்தை கோவையில் உள்ள கள்ளக்காதலி மைதிலிக்கு செலவு செய்துள்ளார். இதனால் ஸ்ரீதரை கொலை செய்துள்ளனர் என தெரிந்தது.

இதற்கிடையே, ஸ்ரீதர் கொலைக்கு கூலிப் படையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த ரியான் என்ற சுதாகர் (38) என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வேதாரண்யம், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். மேலும், சுதாகர் பற்றி தகவல் தெரிந்தால் அம்பத்தூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவிக் கலாம். அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten