தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

கிழக்கில் உள்ளூராட்சித் திணைக்களங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தொழில் இழக்கும் அபாயம்


இந்தியா- இலங்கைக்கு இடையே வருகைக்கு பின்னர் வீசா விரைவில் அறிமுகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:04.22 PM GMT ]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வருகைக்கு பின்னர் வீசாவை அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
வீசா அவசியமற்ற முறைமை ஒன்றை அமுலாக்குவதன் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையும் இந்தியாவும் நீண்ட நாள் நட்பு நாடுகளாக உள்ளன இந்தநிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பயணிக்கும் போது வீசா அவசியப்பாடு அற்ற நிலை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் உள்ளூராட்சித் திணைக்களங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தொழில் இழக்கும் அபாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 03:14.00 PM GMT ]
அரசாங்கத்தின் இறுதியாக வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு சுற்றறிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி திணைக்களங்களில் பல ஆண்டுகளாக கடமையாற்றும் ஊழியர்கள் தொழில் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடகிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தினேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மாவட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது அரசாங்க ஊழியர்களின் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.அத்துடன் கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட உள்ளூராட்சி திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்களில் பலர் இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டது.
இதுவரையில் ஊழியர்கள் நியமனம் செய்தற்கான ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிக்கப்படாமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கடந்த காலத்தில் இந்த ஆட்சேர்ப்பு திட்ட வரைபை தயாரிக்குமாறு பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் அவை கவனத்தில் கொள்ளப்படாமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கத்தின் 2006ம் ஆண்டு ஒன்பதாம் இலக்க சுற்றறிக்கையின் படி ஊழியர் ஒருவர் இரண்டு விசேட சித்திகளையும் நான்கு சித்திகளையும் பெறவேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததானது குறைந்த கல்வித்தகமையுடன் கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தில் பல வருடங்களாக கடமை புரியும் ஊழியர்கள் தொழில் இழக்க நேரிடும்.
இந்த ஆட்சேர்ப்பு திட்டம் மூலம் அடுத்த பதவி நிலைக்கு செல்லாமல் சம்பள அதிகரிப்பை பெறமுடியாது. இதன் கீழ் 2010ம் ஆண்டுவரை சம்பள அதிகரிப்பு பெற்றவர்களிடம் அவற்றினை மீளப்பெறப்பட்டு வருகின்றது.
வடகிழக்கு மாகாணம் ஒன்றாக இயங்கிய காலப்பகுதியில் ஏனைய திணைக்களங்களில் ஆட்சேர்ப்பு திட்டம் உரியமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அங்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
ஆனால் கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரையில் கடந்த 23வருடங்களாக கதிரைகள் மாறியதே தவிர எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பில் கடந்த கால ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தல்களை மேற்கொண்டபோதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2006ம் ஆண்டுக்கு முன்னர் இணைந்த ஊழியர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடாது. ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிக்கும்போது வடகிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை வலியுறுத்தி எதிர்வரும் 03ம் திகதி 3.00மணி தொடக்கம் 4.00மணிவரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி திணைக்களத்திலும் கடமையாற்றும் ஊழியர்களும் பங்குகொள்வார்கள் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
கடந்த கிழக்கு மாகாணசபையின் கால்நடை சுகாதார உற்பத்தி திறன் அமைச்சரின் வேண்டுகோளின்பேரில் ஆளுனரினால் விசேட அனுமதியுடன் நிரந்தர நியமனம் வழங்க முடியுமாயின் பாதிக்கப்பட்ட ஏனைய ஊழியர்களுக்கு இவற்றை வழங்கமுடியாதா எனவும் இங்கு கேள்வியெழுப்பப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten