[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 03:05.33 AM GMT ]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியிலான 285 கிலோமீற்றர் மின்சார விநியோக திட்டம். தொழில்நுட்ப மற்றும் சமயரீதியான பிரச்சினைகளால் தடங்கிப்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2007 ஆம் ஆண்டு பிரேரிக்கப்பட்டது. எனினும் இந்த திட்டத்தின்போது பயன்படுத்தப்படும் வயர்களின் நீளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை,மற்றும் ராமர் பாலம் என்ற சமயரீதியான பிரச்சினை என்பன தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்ததிட்டத்தின் மூலம் 1000 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விநியோகிக்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மதுரைக்கும் இலங்கையின் அநுரதப்புரத்துக்கும் இடையில் இந்த விநியோகத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இதற்காக 3000 கோடி ரூபாவை முதலிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனது மனைவியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்! பொலிஸில் கணவன் முறைப்பாடு: மட்டக்களப்பில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 04:10.05 AM GMT ]
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியைக் காணவில்லை, கண்டு பிடித்துத் தருமாறு ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறக்கொட்டாஞ்சேனை ஏரிக்கரை வீதியைச் சேர்ந்த கந்தையா பிரதீபன் (வயது 33) என்பவரே நேற்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மனைவி காணாமல் போனமை தொடர்பில் ஏற்கெனவே மட்டக்களப்பு பொலிஸிலும் தான் முறைப்பாடு செய்ததாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
4 பிள்ளைகளின் தாயான மனைவி பரமானந்தம் சசிகலா ( 27வயது) என்பவர் கடந்த 16 நாட்களாக காணாமல் போயுள்ளார். இறுதியாக கடந்த 14ம் திகதி தனது மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தார். அதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளார்.
அவரது கையடக்கத் தொலைபேசியும் தற்போது பாவனையில் இல்லை. எல்லா இடங்களிலும் விசாரித்துப் பார்த்தோம். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தாய் எப்போது வருவார் என குழந்தைகள் எந்தநேரமும் அழுதவண்ணம் உள்ளனர்.
எப்படியாவது தனது மனைவியை கண்டுபிடித்துத் தருமாறும் தனது குழந்தைகளின் கண்ணீரை துடைக்குமாறும் பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten