[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:12.28 AM GMT ]
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அசாத் சாலியின் நடவடிக்கைகளை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஊடகவியலாளர்களின் உதவி அவசியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டுமென இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை எனவும் குறித்த சஞ்சிகை திரிபுபடுத்திய செய்தியை வெளியிட்டதாகவும் அசாத் சாலி, சத்தியக்கடதாசி மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலை செய்யப்பட்ட போதிலும், அசாத் சாலியின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் உதவி அவசியமில்லை!- ரணில் (செய்தித் துளிகள்-3)
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:15.40 AM GMT ]
எனது நடவடிக்கைகள் தொடர்பில் தேவையானளவு பிரச்சாரம் செய்யப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் அனைவரும் இந்த இடத்தை வெளியேற வேண்டும்.
குறிப்பாக பிரதேச ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு அவசியமில்லை என தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் தொகுதி அமைப்பாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
21ம் திகதி நிச்சயமாக தொழிற்சங்கப் போராட்டம் நடைபெறும்
எதிர்வரும் 21ம் திகதி நிச்சயமாக தொழிற்சங்கப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. தேசிய எதிர்ப்பு தினமாக எதிர்வரும் 21ம் திகதி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசாங்க, தனியார் மற்றும் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த 600 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 21ம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
11 மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த அதிபர்
கெக்கிராவ, கல்கிரியாகம பிரதேசத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் பதினொரு மாணவிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.
சந்தேக நபரை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்க மறியலில வைக்குமாறு மாவட்ட நீதவான் எஸ்.எம்.டபிள்யு கொரசகல்ல உத்தரவிட்டுள்ளார்.
கல்கிரியாம ஆரம்பப் பாடசாலையின் அதிபர் பீ.திசாநாயக்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குறித்த அதிபர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் கல்கிரியாகம பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten