தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே: ஐ.தே.க!

செங்கலடியில் கடையொன்று இனந்தெரியாதோரால் தீக்கிரை
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 07:21.34 AM GMT ]
செங்கலடி – பதுளை வீதியல் கித்துள் வடிச்சல் வீதியில் சில்லைறைக் கடையொன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை கடையின் உரிமையாளர், தனது வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்ததும் வழமை போல் கடையை மூடிவிட்டு வடிச்சல் பகுதியிலுள்ள வாடிக்கு படுக்கைக்காக சென்றுள்ளார்.
அதிகாலை வேளையில் கடை தீப்பற்றி எரிவதாக வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் கூறியதும் சென்று பார்த்த போது கடை முற்றாக எரிந்த நிலையில் காணப்பட்டது என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிக்கப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே: ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 08:04.33 AM GMT ]
வடக்கில் வாழுகின்ற தமிழர்களும் அரசியல் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க  வழியேற்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோன்காகே தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே. வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி அவர்களும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வழியேற்படுத்த வேண்டும்.
அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் இடம்பெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியிலுள்ள சிலர் அதனை தடுத்து நிறுத்த பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
வடக்கில் உள்ள மக்கள் சுதந்திரமான தேர்தல் இடம்பெற்று தமக்கு ஜனநாயக உரிமை கிடைக்காதா என ஆவலாய் உள்ளனர்.
அரசாங்கத்தில் உள்ள பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் நாட்டில் சுதந்திரமாக உரிமைகளை அனுபவித்து வாழ முடியும் என்றால் ஏன் வடக்கில் வாழும் சாதாரண பொதுமக்கள் சுதந்திரமாக வாழக் கூடாது.
ஏனைய மாகாண மக்கள் அனுபவிக்கும் சுததந்திரமும் உரிமைகளும் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். எனவே, அரசாங்கம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten